Last Updated:
ஜப்பான், தனீகஸிமா மையத்திலிருந்து ஹெச்3 ராக்கெட் மூலம் ஹெச்டிவி-எக்ஸ்1 சரக்கு விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆள் இல்லாத சரக்கு விண்கலத்தை அனுப்பி ஜப்பான் சாதனை படைத்துள்ளது.
விண்வெளியில் பல்வேறு நாடுகளும் இணைந்து உருவாக்கியுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்களை ஆள் இல்லா சரக்கு விண்கலம் மூலம் ஜப்பான் அனுப்பிவைத்துள்ளது. ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள தனீகஸிமா விண்வெளி மையத்திலிருந்து ஹெச்3 ராக்கெட் மூலம், ஹெச்டிவி-எக்ஸ்1 விண்கலம் அனுப்பிவைக்கப்பட்டது.
விண்கலத்தை புவிவட்டப் பாதையில் ராக்கெட் நிலைநிறுத்திய நிலையில், விண்கலம் படிப்படியாக நகர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய உள்ளது. அதிலிருந்து பொருட்களை ரோபோ கை மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ஜப்பான் விண்வெளி வீரர் கிமியா யூய் பெற்றுக் கொள்ள உள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் 3 மாதங்களுக்கு இணைந்திருக்கும் விண்கலம், பின்னர் அங்கிருந்து தேவையில்லாத பொருட்களுடன் பூமிக்கு திரும்ப உள்ளது.
October 26, 2025 12:54 PM IST
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆள் இல்லாத சரக்கு விண்கலம்.. புதிய சாதனை படைத்த ஜப்பான்!


