Last Updated:
மகாராஷ்டிரா, சத்தீஷ்கர் மாநிலங்களில் 2 நாளில் 258 நக்சலைட்கள் சரண்.
மத்திய பாஜக அரசு தொடர்ந்து நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் 31 மார்ச் 2026ஆம் ஆண்டுக்கு முன் இந்தியாவில் இருந்து நக்சலிசத்தை ஒழிப்போம்” எனத் தெரிவித்து வருகிறார்.
அதேபோல், நக்சல்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் அதற்கான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஷ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மொத்தம் 258 நக்சலைட்கள் சரணடைந்துள்ளனர்.
நேற்று (15ஆம் தேதி) சத்தீஷ்கர் மாநிலத்தில் இருந்து 27 நக்சலைட்களும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 61 நக்சலைட்களும் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (16ஆம் தேதி) ஒரே நாளில் மொத்தம் 170 நக்சலைட்கள் சரணடைந்துள்ளனர்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில், “நக்சலைட்டுக்கு எதிரான நமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கிய நாள். சத்தீஸ்கரில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். நேற்று சத்தீஷ்கரில் 27 பேரும், மகாராஷ்டிராவில் 61 பேரும் நக்சலைட் இயக்கத்தில் இருந்து வெளியேறினர். மொத்தத்தில், கடந்த இரண்டு நாட்களில் 258 பேர் தீவிரவாத வன்முறையை கைவிட்டு வெளியேறியுள்ளனர்.
नक्सलवाद के खिलाफ लड़ाई में बड़ी सफलता!
छत्तीसगढ़ में आज 170 नक्सलियों ने आत्मसमर्पण किया है, कल 27 ने हथियार डाले थे। महाराष्ट्र में भी कल 61 नक्सली हथियार त्याग कर मुख्यधारा में लौटे। पिछले दो दिनों में कुल 258 वामपंथी उग्रवादियों ने हिंसा का रास्ता छोड़ा है।
हिंसा छोड़कर…
— Amit Shah (@AmitShah) October 16, 2025
எங்கள் கொள்கை தெளிவாக உள்ளது: சரணடைய விரும்புவோர் வரவேற்கப்படுவார்கள், துப்பாக்கியை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் எங்கள் படைகளை எதிர்கொள்ள வேண்டும். நக்சலிசத்தின் பாதையில் இன்னும் இருப்பவர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பிரதான நீரோட்டத்தில் சேருமாறு நான் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். 2026 மார்ச் 31 க்கு முன்பு நக்சலிசத்தை வேரோடு அகற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
October 16, 2025 9:58 PM IST


