Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆசிய நாடுகளுக்கான பயணத்தைத் தொடங்கினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆசிய நாடுகளுக்கான பயணத்தைத் தொடங்கினார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக டிரம்ப் ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். வெள்ளை மாளிகையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட டிரம்ப் முதலில் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறார். அப்போது பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மலேசிய பயணத்துக்கு பிறகு டிரம்ப் ஜப்பானுக்கு செல்கிறார். அப்போது ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பின் தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஆசிய நாடுகளுக்கான பயணத்தை தொடங்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்தித்துப் பேச ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தார். பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை சரியான நேரத்தில் குறைப்போம் என்றும் டிரம்ப் கூறினார்.
October 26, 2025 8:46 AM IST


