துபாய் தங்கம் வாங்குவதற்கான சிறந்த இடமாக பார்க்கப்படுகிறது. அக்டோபர் 2025-ல், 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு சுமார் ரூ. 1,14,740 க்கு கிடைக்கிறது. இதுவே இந்தியாவில் இந்த 10 கிராம் 24 காரட் தங்கம் வாங்கினால் ரூ.1,30,910ஆகும். ஆனால் துபாயில் வாங்குவது இதை விட குறைவாகவே இருக்கிறது. துபாய் ஜிஎஸ்டி இல்லாதது, இறக்குமதி வரிகள் மிகக் குறைவு, மேலும் உற்பத்தி செலவுகளும் இந்தியாவை விடக் குறைவு என்பதால் இந்த விலையில் விற்பனையாகிறது.


