Last Updated:
வெஸ்ட் இண்டீசை விடவும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 139 ரன்கள் பின்தங்கியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டுள்ளது. தற்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ள நிலையில் இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக ஜான் கேம்ப்பல் மற்றும் சந்திரபால் களம் இறங்கினர். சந்திரபால் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேம்ப்பல் 8 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்தவர்களில் ஆலிக் அதானாஸ் 12 ரன்களும், பிராண்டன் கிங் 13 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ரோஸ்டன் சேஸ் 24 ரன்னில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 26 ரன்களும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்களும் எடுத்தனர். 44.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களம் இறங்கினர்.
வெஸ்ட் இண்டீசை விடவும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 139 ரன்கள் பின்தங்கியுள்ளது.
October 02, 2025 3:44 PM IST


