• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்… சொந்த ரிக்கார்டை முறியடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்….

GenevaTimes by GenevaTimes
April 16, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்… சொந்த ரிக்கார்டை முறியடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்….
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூருவுக்கு எதிரான மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் மேட்ச்சில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது. கடந்த சில போட்டிகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணியின் கிளென் மேக்வெல்லுக்கு பதிலாக பெர்கூசன் அணியில் இடம்பெற்றார்.

விளம்பரம்

சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களத்தில் இறங்கினர். இருவரும் ஒவ்வொரு ஓவர்களிலும் சிக்சர், பவுண்டரிகளை விளாச ஸ்கோர் விறுவிறுவென எகிறத் தொடங்கியது. குறிப்பாக டிராவிஸ் ஹெட் சின்னசாமி மைதானத்தில் சிக்சர் மழை பொழிந்தார்.

தலா 2 சிக்சர், பவுண்டரியுடன் 34 ரன்கள் சேர்த்த அபிஷேக் சர்மா ஆட்டமிழக்க அடுத்து வந்த கிளாசனும் அதிரடியை தொடர்ந்தார். 8 சிக்சர், 9 பவுண்டரிகளை பறக்க விட்ட டிராவிஸ் ஹெட் வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து சன்ரைசர்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

விளம்பரம்

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அடிக்கப்பட்ட 4 ஆவது சதமாக இது அமைந்தது. தொடர்ந்து விளையாடிய ஹெட் 41 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார். ஹெட்டை தொடர்ந்து 31 பந்துகளை எதிர்கொண்ட ஹெய்ரிச் கிளாசன் 7 சிக்சர் 2 பவுண்டரியுடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

எய்டன் மார்க்ரம் 17 பந்துகளில் தலா 2 சிக்சர் பவுண்டரியுடன் 32 ரன்கள் சேர்க்க, வெறும் 10 பந்துகளை எதிர்கொண்ட அப்துல் சமத் 3 சிக்சர் 4 பவுண்டரியுடன் 37 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஐதராபாத் அணி 287 ரன்கள் குவித்துள்ளது.

விளம்பரம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரு அணி எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முன்னதாக இதே ஐதராபாத் அணி மும்பை அணிக்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்ற மேட்ச்சில் 277 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது தனது சொந்த ரிக்கார்டை முறியடித்துள்ளது ஐதராபாத் அணி.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

‘விஐபி’ கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி: சுங்கச் சாவடிகளில் கட்டண சலுகை விரைவில் ரத்து | end to VIP culture concessions at nh toll plaza to be scrapped soon

Next Post

Ugut pelanggan McDonald’s 5 orang ditahan | Makkal Osai

Next Post
Ugut pelanggan McDonald’s 5 orang ditahan | Makkal Osai

Ugut pelanggan McDonald’s 5 orang ditahan | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin