• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Ind vs Aus | ரோஹித் – கோலி மிரட்டல்.. இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
Ind vs Aus | ரோஹித் – கோலி மிரட்டல்.. இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 25, 2025 4:17 PM IST

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி, ரேஹித் சர்மா 121 ரன்கள், விராட் கோலி 74 ரன்கள், ஹர்சித் ராணா 4 விக்கெட்கள்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரேஹித் சர்மா 121 ரன்கள் மற்றும் விராட் கோலி 74 ரன்கள் உடன் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டி மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனால் சிட்னி போட்டியில் பரபரப்பு இல்லையென்றாலும் ஆறுதல் வெற்றி பெற இந்திய முனைப்பு காட்டியது. இந்த போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் 2 போட்டிகளில் பவுலிங்கை தேர்வு செய்து வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா சிட்டினியில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் அந்த முடிவு ஆஸ்திரேலியாவிற்கு பெரிய பின்னடைவாக இருந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் ஹர்சித் ராணா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கில் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முதல் 2 போட்டிகளில் தொடர்ந்து டக்அவுட்டான விராட் கோலி இ்ன்றைய போட்டியில் ரோஹித் உடன் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய அணியை புரடடி எடுத்தனர். நீண்ட நாட்களுக்கு பின் ரோஹித் – விராட் ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தனர். விராட் அரைசதம் அடித்த நிலையில் ரோஹித் சர்மா சதமடித்தார். சர்வதேச போட்டிகளில் இது ரோஹித் சர்மாவிற்கு 50 ஆவது சதமாகும்.

இறுதியாக இந்திய அணி 38.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. ரேஹித் சர்மா 121 ரன்கள் மற்றும் விராட் கோலி 74 ரன்கள் உடன் கடைசி வரை களத்தில் இருந்தனர். முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்த நிலையில் இந்தியா கடைசி போட்டியில் அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மாவிற்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 25, 2025 3:46 PM IST

Read More

Previous Post

ஆந்திராவில் எரிந்த பேருந்தில் இருந்த 234 ஸ்மார்ட்போன்களால் தீயின் தீவிரம் அதிகரித்ததா? | Did 234 smartphones in Kurnool bus fuel the fire Shocking information

Next Post

முதலீட்டு முடிவுகள் பற்றிய ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி உள்நோக்கம் கொண்டது: எல்ஐசி | The article appear to have been made with the intentions to tarnish the reputation and image of LIC

Next Post
முதலீட்டு முடிவுகள் பற்றிய ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி உள்நோக்கம் கொண்டது: எல்ஐசி | The article appear to have been made with the intentions to tarnish the reputation and image of LIC

முதலீட்டு முடிவுகள் பற்றிய ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி உள்நோக்கம் கொண்டது: எல்ஐசி | The article appear to have been made with the intentions to tarnish the reputation and image of LIC

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin