• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

டாய்லெட்டில் பேப்பர் வேண்டுமா..? சீனாவின் புதிய விதியால் மக்கள் கடும் அதிர்ச்சி | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
டாய்லெட்டில் பேப்பர் வேண்டுமா..? சீனாவின் புதிய விதியால் மக்கள் கடும் அதிர்ச்சி | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 25, 2025 10:46 PM IST

பொது கழிப்பறைகளில் டாய்லெட் பேப்பர் தொடர்பான புதிய விதி சீனாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது, இது தொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

சீனாவில் புதிய விதியால் மக்கள் அதிர்ச்சி
சீனாவில் புதிய விதியால் மக்கள் அதிர்ச்சி

பொது கழிப்பறைகளில் டாய்லெட் பேப்பர் தொடர்பான புதிய விதி சீனாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது, இது தொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இது கேட்பதற்கு வேடிக்கையாகத் தோன்றினாலும், பலருக்கு பிரச்சனைகளையும் ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் வெளிச்சத்திற்கு வந்த இந்த சம்பவம், இப்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

சீனாவில் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அன்றாடப் பணிகளில் இருந்தும் பணம் ஈட்ட புதிய யோசனைகளை அங்குள்ள அரசாங்கம் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொது கழிப்பறைகளில் டாய்லெட் பேப்பர் பயன்பாட்டையும், விளம்பரங்களையும் இணைத்துள்ளனர். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் சீனா இன்சைடர் @chinainsider என்ற கணக்கில் இருந்து நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வீடியோ பகிரப்பட்டது. அந்த வீடியோவில், ஒரு பெண் டாய்லெட் பேப்பரை பெற ஒரு விளம்பரத்தைப் பார்க்க வேண்டியிருந்தது.

தகவலின் படி, இந்த கழிப்பறைகளுக்குள் நுழைந்த பிறகு டாய்லெட் பேப்பர் வேண்டுமென்றால், டிஸ்பென்சரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் உங்கள் மொபைல் போனில் ஒரு சிறிய விளம்பரம் காட்டப்படும். அந்த விளம்பரம் முடிந்ததும், டாய்லெட் பேப்பர் மெஷினில் இருந்து வெளியே வரும். இதை விரும்பாதவர்கள் விளம்பரங்களின் தொந்தரவு இல்லாமல் டாய்லெட் பேப்பரை பயன்படுத்த 0.5 யுவான் கட்டணமாக செலுத்த வேண்டும். பொது கழிப்பறைகளில் மக்கள் அதிகமாக டாய்லெட் பேப்பரை பயன்படுத்துவதாகவும், இதைத் தடுக்க இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சீன அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் இந்த புதிய விதிக்கு கலவையான கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகின்றனர்.

சிலர் இந்த முயற்சியை தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் வளங்களை சேமிப்பதற்கான ஒரு வழி என்று பாராட்டுகின்றனர், மற்றவர்கள் இதை ஒரு தொந்தரவான நடவடிக்கை என்று கூறுகின்றனர். தொலைபேசியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால், இன்டர்நெட் கனெக்ஷன் துண்டிக்கப்பட்டால், அல்லது கையில் பணம் இல்லையென்றால் என்ன நடக்கும் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதில் ஒரு யூசர், இந்த மெஷின்களை உடைக்கும் முதல் நபராக நான் இருப்பேன், என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர், நான் சீனா சென்றபோது, ​​டாய்லெட் பேப்பர் எனக்கு கிடைக்கவில்லை. எனவே என்னுடைய டாய்லெட் பேப்பரை நான் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது, என்று கூறியுள்ளார்.

மற்றொருவர், உங்கள் வீட்டிலிருந்தே டாய்லெட் பேப்பரை எடுத்துச் செல்வது நல்லது, என்று கூறியுள்ளார். இன்னொருவர், யாராவது தங்கள் போனை எடுத்துச் செல்ல மறந்துவிட்டால் என்ன செய்வது?, என்று கேலி செய்துள்ளார். சீனாவில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதன் முறை அல்ல. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டாய்லெட் பேப்பரை வழங்குவதற்கு முன்பு மக்கள் 30 வினாடிகள் கொண்ட விளம்பரத்தைப் பார்க்க வேண்டும் என்ற வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 25, 2025 10:15 PM IST

Read More

Previous Post

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: வெள்ளி விலையும் அதிரடி ஏற்றம்! | Gold, Silver Rate reaches new high today in Chennai

Next Post

3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

Next Post
3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin