• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பேங்க் டெபாசிட் vs போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்.. யாருக்கு எது சிறந்தது..? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
பேங்க் டெபாசிட் vs போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்.. யாருக்கு எது சிறந்தது..? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 25, 2025 2:42 PM IST

சிறு முதலீட்டாளர்களுக்கு மேற்கண்ட இரண்டும் பாதுகாப்பானவை என்றாலும், தபால் அலுவலகத் திட்டங்கள் சில நேரங்களில் சற்று சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

பேங்க் டெபாசிட் vs போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்
பேங்க் டெபாசிட் vs போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்

பணத்தை சேமிக்க ஏதாவது இடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்போர் பொதுவாக பாதுகாப்புக்கு தான் முதன்மையாக முன்னுரிமை அளிப்பார்கள். அந்த வகையில் பல்வறு நம்பகமான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் தபால் அலுவலகத் திட்டங்கள் ஆகிய இரண்டும் உத்தரவாதமான வருமானம் மட்டும் பாதுகாப்பை வழங்குவதால் ரிஸ்க் எடுக்காமல்  முதலீடு செய்ய நினைக்கும் சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமான தேர்வுகளாக இருக்கின்றன. ஆனால் பாதுகாப்பு, அணுகல் மற்றும் ஒட்டுமொத்த நம்பகத்தன்மையைப் பொறுத்தவரை இரண்டில் எது சிறந்ததாக இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இதற்கான பதிலை இங்கே பார்க்கலாம். 

தபால் அலுவலக திட்டங்கள் – அரசின் உத்தரவாதம்

பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC) மற்றும் மாதாந்திர அடிப்படையில் வருமானத் திட்டங்கள் போன்ற அரசு ஆதரவு தபால் அலுவலகத் திட்டங்களுக்கு அரசால் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன. எளிமையாக சொல்வதென்றால் இவை கிட்டத்தட்ட ரிஸ்க் இல்லாதவை. நீங்கள் முதலீடு செய்யும் அசல் தொகைக்கு பாதுகாப்பு இருக்கும் என்பதோடு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உங்கள் வருமானம் நிலையானதாக இருக்கும் அல்லது அரசு நிர்ணயிக்கும் வட்டி விகிதங்களுக்கு உட்பட்டது. ரிஸ்க்கே இல்லாத அதே சமயம் எளிதான முதலீட்டை தேர்வு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு தபால் அலுவலகத் திட்டங்கள் நூறு சதவீதம் உத்தரவாதமானதாகும்.

பேங்க் டெபாசிட்கள் – நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய பாதுகாப்பு:

வங்கிகள் வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட்கள் மற்றொரு பாதுகாப்பான முதலீடுகள் ஆகும். பொதுவாக  இந்திய பொதுத்துறை வங்கிகள் பாதுகாப்பானவை, மேலும் ரூ.5 லட்சம் வரையிலான FD-க்கள் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தால் (DICGC) காப்பீடு செய்யப்படுகின்றன. எனவே நீங்கள் முதலீடு செய்யும் வங்கி சிக்கலில் மாட்டினாலும் கூட, காப்பீடு கிடைக்கும் என்பதால் உங்கள் அசல் தொகைக்கு பாதுகாப்பு இருக்கும்.  எனினும் பெரும்பாலான தபால் அலுவலகத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, ​​வங்கிகள் வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களானவை, தவணைக்காலம் மற்றும் முன்கூட்டியே பணம் எடுக்கும் அம்சங்களில் முதலீட்டாளர்களுக்கு நெகிழ்வானவையாக இருக்கின்றன.

வருமானம் & வசதி:

சிறு முதலீட்டாளர்களுக்கு மேற்கண்ட இரண்டும் பாதுகாப்பானவை என்றாலும், தபால் அலுவலகத் திட்டங்கள் சில நேரங்களில் சற்று சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன, குறிப்பாக PPF போன்ற நீண்ட கால முதலீடுகளுக்கு. சில நேரங்களில் குறிப்பாக வட்டி விகித உயர்வு ஏற்பட்டால், வங்கிகள் குறுகிய கால வட்டி விகிதங்களை அதிகப்படுத்த கூடும். அடுத்ததாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் அணுகல்தன்மை. அஞ்சல் அலுவலகத் திட்டங்களை பொறுத்த வரை பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு தபால் நிலையத்திற்கு நேரில் செல்ல வேண்டியிருக்கும், அதேசமயம் வங்கிகளின் FD சார்ந்த வேலைகளை பொதுவாக ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.

அஞ்சல் அலுவலகத் திட்டங்களுக்கும், வங்கி FD-க்கும் இடையிலான தேர்வு உங்கள் தேவைகளைப் பொறுத்தது. அதிக பாதுகாப்பு, நீண்ட கால முதலீடு மற்றும் சற்று அதிக வருமானம் ஆகியவை உங்கள் முன்னுரிமையாக இருந்தால், அஞ்சல் அலுவலகத் திட்டங்களே சிறந்த தேர்வு. அதே நேரம் நினைத்த நேரத்தில் பணத்தை திரும்பப் பெறும் வசதி, அணுகல் மற்றும் காப்பீட்டின் கீழ் பாதுகாப்பு ஆகியவை உங்கள் முன்னுரிமையாக இருந்தால், வங்கிகள் வழங்கும் FD உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கலாம். சில நேரங்களில் இந்த இரண்டுமே முதலீட்டை பன்முகப்படுத்த, தனிப்பட்ட நன்மைகளை பெற இணைந்து சில முதலீட்டாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

அடிப்படை கேள்விகளும் & பதில்களும்:

தபால் அலுவலகத் திட்டங்கள் ஆபத்து இல்லாதவையா?

ஆம், அவை அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப் பட்டவை, எனவே அசல் முதலீட்டிற்கு மிகவும் பாதுகாப்பானவை.

வங்கிகளின் டெபாசிட் தொகைக்கான காப்பீட்டு வரம்பு என்ன?

ஒரு டெபாசிட்டருக்கு ஒரு வங்கிக்கு ரூ.5 லட்சம் வரையிலான பேங்க் டெபாசிட் DICGC-ஆல் காப்பீடு செய்யப்படுகிறது.

குறுகிய கால சேமிப்பிற்கு எது சிறந்தது?

குறுகிய கால இலக்குகளுக்கு வங்கிகளின் FD-க்கள் சிறந்த தேர்வு. அதே நேரத்தில் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள திட்டங்கள் நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டமிடலுக்கு சிறந்தவை.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 25, 2025 2:42 PM IST

Read More

Previous Post

ஸ்டீவ் ஸ்மித்தை விட விரைவில் 3,000 ரன்கள் எடுத்து ஹெட் சாதனை! | Head breaks record by scoring 3,000 runs faster than Steve Smith

Next Post

பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை நிறுத்திவிட்டு பிரதமர் மோடியுடன் நெதன்யாகு பேச்சு | Netanyahu calls off defense cabinet meeting, holds talks with PM Modi

Next Post
பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை நிறுத்திவிட்டு பிரதமர் மோடியுடன் நெதன்யாகு பேச்சு | Netanyahu calls off defense cabinet meeting, holds talks with PM Modi

பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை நிறுத்திவிட்டு பிரதமர் மோடியுடன் நெதன்யாகு பேச்சு | Netanyahu calls off defense cabinet meeting, holds talks with PM Modi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin