Last Updated:
உள்ளங்கையில் காரணத்தை எழுதிவிட்டு பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் இரண்டு போலீசார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக உள்ளங்கையில் எழுதிவிட்டு பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல்தான் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். பெண் மருத்துவரின் உடலை கைப்பற்றிய போலீசார், அவரது உள்ளங்கையில் இரண்டு காவல் அதிகாரிகள் 5 மாதங்களாக தன்னை பாலியல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாக எழுதி இருந்ததை கண்டறிந்தனர்.
காவல் உதவி ஆய்வாளர் கோபால் பட்னே தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தும் மன ரீதியாக துன்புறுத்தியாகவும் பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரசாந்த் பங்கர் என்பவர் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாக பெண் மருத்துவர் தனது கையில் எழுதியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிர மகளிர் ஆணைய தலைவர் ரூபாளி சக்கன்கர், பெண் மருத்துவரின் மரணத்திற்கு காரணமாக இருவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
—————————————————————————————————————-
————————————————————————————————————————-
October 25, 2025 1:03 PM IST


