Last Updated:
வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள இந்திய அணியின் பும்ரா ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ-யின் சாதனையை முறியடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்சை முடித்துள்ளது.
இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவற்றில் 2 விக்கெட்டுகள் போல்ட் என்ற முறையில் பெறப்பட்டதாகும்.
இதன் மூலம் எதிரணி வீரர்களை போல்ட் என்ற முறையில் ஆட்டமிழக்க செய்த பவுலர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பிரெட் லீயை பும்ரா பின்னுக்கு தள்ளியுள்ளார்.
- ஜேம்ஸ் ஆண்டர்சன் – இங்கிலாந்து – 138 விக்கெட்
- ஸ்டூவர்ட் ப்ராட் – இங்கிலாந்து – 101 விக்கெட்
- மிட்செல் ஸ்டார்க் – ஆஸ்திரேலியா – 96 விக்கெட்
- டேல் ஸ்டெய்ன் – தென்னாப்பிரிக்கா – 90 விக்கெட்
- ட்ரென்ட் போல்ட் – நியூசிலாந்து 72 விக்கெட்
- மகாயா என்டினி – தென்னாப்பிரிக்கா – 70 விக்கெட்
- முகமது ஷமி – இந்தியா – 66 விக்கெட்
- ஜஸ்பிரித் பும்ரா – இந்தியா – 65 விக்கெட்
- பிரெட் லீ – ஆஸ்திரேலியா – 64 விக்கெட்
- கெமார் ரோச் – வெஸ்ட் இண்டீஸ் – 64 விக்கெட்
October 02, 2025 8:35 PM IST


