Last Updated:
தென்கொரியா நாடாளுமன்றம் மருத்துவம் பயிலாதவர்களும் பச்சை குத்தலாம் என சட்டம் இயற்றியது. மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.
மருத்துவம் பயிலாதவர்களும் பச்சை குத்தலாம் என்று தென்கொரியா நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் மருத்துவம் பயிலாதவர்கள் பச்சை குத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் கடந்த 1992 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இதை எதிர்த்து பச்சை குத்தும் தொழிலில் ஈடுபடுவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மருத்துவம் பயிலாதவர்களும் பச்சை குத்தலாம் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இதையடுத்து மருத்துவம் பயிலாதவர்களுக்கும் பச்சை குத்தும் தொழிலில் ஈடுபட உரிமம் வழங்கப்படும் என தென்கொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனால் பச்சை குத்தும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் இதற்கு தென்கொரிய மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பச்சை குத்தினால் தோள் மட்டும் பாதிக்கப்படாது என்றும் மற்ற நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் தென்கொரிய மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
September 26, 2025 2:15 PM IST
“மருத்துவம் பயிலாதவர்களும் பச்சை குத்தலாம்..” தென்கொரியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம்!


