Last Updated:
ஜூனியர் உலக கோப்பை ஆக்கி தொடர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுகிறது.
இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஜூனியர் உலக கோப்பை ஆக்கி தொடர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கப் போவதில்லை என சர்வதேச ஆக்கி சம்மேளனத்திடம் பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலாக விளையாடும் அணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சர்வதேச ஆக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஜூனியர் உலக ஆக்கி தொடரில் இந்தியா, சிலி, சுவிட்சர்லாந்து அணிகளுடன் பாகிஸ்தான் பி பிரிவில் இடம் பெற்றிருந்தது. முன்னதாக ஆடவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்தது. அதன்பின் பாகிஸ்தானுக்கு பதிலாக வங்கதேச அணி ஆசிய கோப்பை ஆக்கி தொடரில் இடம் பெற்றது.
தற்போது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி தொடரில் இருந்தும் விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் விளையாட்டு அணிகள் இந்தியாவில் நடைபெறும் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. நடைபெற்று வரும மகளிர் உலகக் கோப்பை தொடரிலும், பாகிஸ்தான் விளையாடும் ஆட்டங்கள் இலங்கையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
October 25, 2025 7:45 AM IST


