• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சிட்னியில் இன்று கடைசி ஒருநாள் போட்டி: சாதனை படைக்கும் முனைப்பில் ஆஸி – ஆறுதல் வெற்றியை பெறுமா இந்தியா? | team india to play with australia in third odi cricket match at sydney

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சிட்னியில் இன்று கடைசி ஒருநாள் போட்டி: சாதனை படைக்கும் முனைப்பில் ஆஸி – ஆறுதல் வெற்றியை பெறுமா இந்தியா? | team india to play with australia in third odi cricket match at sydney
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிட்னி: இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி சிட்​னி​யில் இன்று காலை 9 மணிக்கு நடை​பெறுகிறது.

ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் முதல் இரு ஆட்​டங்​களி​லும் இந்​திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்​துள்​ளது. மழை​யால் பாதிக்​கப்​பட்ட பெர்த் போட்​டி​யில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்த இந்​திய அணி, அடிலெய் டில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் 2 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வியை சந்​தித்​தது.

இந்​திய அணி தொடரை இழந்​து​விட்ட நிலை​யில் கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் போட்டி சிட்னி நகரில் இன்று நடை​பெறுகிறது. இதில் ஆறு​தல் வெற்றி பெற இந்​திய அணி முயற்​சிக்​கக்​கூடும். முதல் போட்​டி​யில் சிறப்​பாக செயல்பட தவறிய சீனியர் பேட்​ஸ்​மே​னான ரோஹித் சர்மா 2-வது போட்​டி​யில் 97 பந்​துகளில், 73 ரன்​கள் சேர்த்து ஆறு​தல் அளித்​தார். ஆனால் மற்​றொரு நட்​சத்​திர பேட்​ஸ்​மே​னான விராட் கோலி தொடர்ச்​சி​யாக 2-வது முறை​யாக ரன் ஏதும் எடுக்​காமல் ஏமாற்​றம் அளித்​தார்.

இவர்​கள் இரு​வருக்​குமே இது கடைசி ஆஸ்​திரேலிய சுற்​றுப்​பயண​மாக இருக்​கக்​கூடும். இதனால் இரு​வரும் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​து​வ​தில் கவனம் செலுத்​தக்​கூடும். ஷுப்​மன் கில்​லும் பேட்​டிங்​கில் கூடு​தல் கவனம் செலுத்த வேண்​டிய நிலை​யில் உள்​ளார்.

அதேவேளை​யில் கடந்த ஆட்​டத்​தில் 61 ரன்​கள் சேர்த்த ஸ்ரேயஸ் ஐயரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும். மேலும் இரு போட்​டி​யிலும் பேட்​டிங், பந்து வீச்​சில் சிறப்​பாக செயல்​பட்ட அக்​சர் படேலும் மீண்​டும் ஒரு சிறந்த பங்​களிப்பை வழங்​கக்​கூடும்.

சிட்னி ஆடு​களம் சுழற்​பந்து வீச்​சுக்கு சாதக​மாக இருக்​கும் என்பதால் குல்​தீப் யாதவ் சேர்க்​கப்​படக்​கூடும். அவர், களமிறங்​கும் பட்​சத்​தில் நிதிஷ் குமார் ரெட்டி அல்​லது வாஷிங்​டன் சுந்​தர் நீக்​கப்​படக்​கூடும். இதே​போன்று வேகப்​பந்து வீச்​சில் ஹர்​ஷித் ராணா நீக்​கப்பட்டு பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட வாய்ப்பு உள்​ளது.

மிட்​செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்​திரேலிய அணி ஒரு​நாள் போட்​டித் தொடரை முழு​மை​யாக 3-0 என கைப்​பற்​றும் முனைப்​பில் களமிறங்​கக்​கூடும். இருதரப்பு ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரில் அந்த அணி இந்​தி​யாவை முழு​மை​யாக அனைத்து ஆட்​டங்​களி​லும் இது​வரை வென்​றது கிடை​யாது. இன்​றைய ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணி வெற்றி பெறும் பட்​சத்​தில் முதன் முறை​யாக இந்​தி​யா​வுக்கு எதி​ரான இருதரப்பு ஒரு​நாள் போட்டி தொடரை முழு​மை​யாக கைப்​பற்றி சாதனை படைக்​கும்.

அடிலெய்டு போட்​டி​யில் இளம் வீரர்​களான மேத்யூ ஷார்ட், மிட்​செல் ஓவன், கூப்​பர் கானொலி ஆகியோர் அற்​புத​மாக பேட்​டிங் செய்து அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தனர். மிட்​செல் மார்​ஷ், டிரா​விஸ் ஹெட் ஆகியோர் விரை​விலேயே ஆட்​ட​மிழந்த போதி​லும் இவர்​கள் எந்​த​வித அழுத்​த​மும் இல்​லாமல் விளை​யாடி வெற்​றியை வசப்​படுத்​தி​யிருந்​தனர். இவர்​களு​டன் மேட் ரென்​ஷா​வும் இரு போட்​டிகளி​லும் உரிய பங்​களிப்பை வழங்​கி​யிருந்​தார். இந்த இளம் அதிரடி பட்​டாளங்​கள் மீண்​டும் ஒரு முறை இந்​திய பந்​து​வீச்​சுக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும். அதேவேளை​யில் கடந்த இரு ஆட்​டங்​களி​லும் மட்​டையை சுழற்ற தவறிய டிரா​விஸ் ஹெட், பெரிய அளவி​லான இன்​னிங்ஸ் விளை​யாட முயற்​சிக்​கக்​கூடும்.

இன்​றைய ஆட்​டத்​தில் ஆல்​ர​வுண்​ட​ரான ஜேக் எட்​வர்ட்ஸ் அறி​முக வீர​ராக களமிறங்க வாய்ப்பு உள்​ளது. அதேவேளை​யில் மேட் குனேமனும், ஆடம் ஸாம்​பாவுடன் இணைந்து சுழலில் இந்​திய அணிக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். ஆஸ்​திரேலிய அணி ஏற்​கெனவே தொடரை வென்​று​விட்​ட​தால் ஜோஷ் ஹேசில்​வுட், மிட்​செல் ஸ்டார்க் ஆகியோ​ருக்கு ஓய்வு கொடுக்​கப்பட வாய்ப்பு உள்​ளது.

சிட்​னி​யில் இந்​தியா எப்​படி? – சிட்னி மைதானத்​தில் இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் 19 முறை ஒரு​நாள் போட்​டிகளில் மோதி உள்​ளன. இதில் ஆஸ்​திரேலிய அணி 16 ஆட்​டங்​களில் வெற்றி பெற்​றிருந்​தது. இந்​திய அணி 2 ஆட்​டங்​களில் வெற்​றியை பதிவு செய்​திருந்​தது. இந்த வெற்​றிகள் 2008 மற்​றும் 2016-ம்​ ஆண்​டு நடை​பெற்​ற ஆட்​டங்​களில்​ கிடைக்​கப்​பெற்​றவை​யாகும்​. ஒரு ஆட்​டம்​ ​முடிவு இல்​லாமல்​ போனது.



Read More

Previous Post

தீபாவளி விடுமுறை முடிந்து ஊருக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆம்னி பேருந்து தீவிபத்தில் சிக்கி உயிரிழப்பு.. ஆந்திராவில் சோக சம்பவம் | இந்தியா

Next Post

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம் | No one put pressure on trade deal negotiations Union Minister Piyush Goyal

Next Post
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம் | No one put pressure on trade deal negotiations Union Minister Piyush Goyal

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம் | No one put pressure on trade deal negotiations Union Minister Piyush Goyal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin