மேலும் இந்தியாவின் ஏற்றுமதியாளர்களுக்கு நியாயமான நெறிமுறைகளை உறுதிசெய்யவும் அதீத கட்டணத்தின் தாக்கத்தைக் குறைக்கவும் புதிய சந்தைகளையும் இந்தியா ஆராய்ந்து வருகிறது.
வெளிப்புற அழுத்தங்களால் அல்லாமல் நாட்டின் நலன்களையும் மூலோபாயத்தையும் கருத்தில்கொண்டே முடிவு எடுக்கப்படும்.

தேசத்தின் நலனைத் தவிர வேறு எதன் அடிப்படையிலும் இந்தியா அதன் நண்பர்களைத் தேர்வு செய்ததில்லை” என்றார்.
மேலும் இந்தியா பரஸ்பர மரியாதையுடனேயே நட்பைப் பேணும் என்றும், யாரிடம் வர்த்தகம் செய்யலாம், செய்யக் கூடாது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ளாது என்று அமெரிக்காவைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் தருவதை ஒட்டி அவரது கருத்துக்கள் அமைந்தன.
சமீபகாலமாக இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்துள்ளது. இதனால் மோடி அரசாங்கம் டொனால்ட் ட்ரம்புக்கு அஞ்சி நாட்டின் நலன்களை விட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

