• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.ஜ.கூட்டணி அமோக வெற்றி பெறும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை | pm hopes nda will get massive victory in bihar assembly election

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.ஜ.கூட்டணி அமோக வெற்றி பெறும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை | pm hopes nda will get massive victory in bihar assembly election
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சமஸ்திபூர்: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) வரலாறு காணாத வெற்றி பெறும். அனைத்து தேர்​தல் சாதனை​களை​யும் என்​டிஏ முறியடிக்​கும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

வரும் நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி அந்த மாநிலத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார். பிஹாரின் சமஸ்​திபூர், பேகுச​ரா​யில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக அவர் வாக்கு சேகரித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

பிஹார் முன்​னாள் முதல்​வர் கர்ப்​பூரி தாக்​குருக்கு கடந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்​கப்​பட்​டது. அவரது வழி​காட்​டு​தல்​களின்​படி ஏழைகளின் முன்​னேற்​றத்​துக்​காக என்​டிஏ அரசு அயராது பாடு​பட்டு வரு​கிறது.

பிஹார் மாநிலத்தை சேர்ந்த 1.2 கோடி பெண்​கள் சுய தொழில் தொடங்க அவர்​களின் வங்​கிக் கணக்​கு​களில் தலா ரூ.10,000 டெபாசிட் செய்​யப்​பட்டு உள்​ளது. குறு, சிறு விவ​சா​யிகளுக்கு நிதி​யுதவி மற்​றும் இளஞர்​களின் வேலை​வாய்ப்​புக்​காக பல்​வேறு திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. பிஹாரில் ஏழைகள், பட்​டியலின, பிற்​படுத்​தப்​பட்ட, மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட சமு​தாய மக்​களின் முன்​னேற்​றத்​துக்​காகவும் பல்​வேறு திட்​டங்​கள் செயல்படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

பல ஆயிரம் கோடி ஊழல் வழக்​கு​களில் தொடர்​புடைய ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் கட்​சிகளின் தலை​வர்​கள் ஜாமீனில் வெளியே நடமாடு​கின்​றனர். அவர்​கள் அமைத்​திருப்​பது மெகா கூட்​டணி கிடை​யாது. மெகா ஊழல்​வா​தி​களின் கூட்​டணி ஆகும்.

பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார் மாநில மக்​களின் முன்​னேற்​றத்​துக்​காக இரவு, பகலாக உழைத்து வரு​கிறார். அவரது தலை​மை​யில் மாநிலத்​தின் அனைத்து பகு​தி​களும் சமச்​சீ​ராக முன்​னேற்​றம் அடைந்து வரு​கின்றன. வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முதல்​வர் நிதிஷ் குமார் தலை​மை​யில் சந்​திப்​போம்.

ஆர்​ஜேடி, காங்​கிரஸின் மூத்த தலை​வர்​களுக்கு மக்​கள் நலனில் துளி​யும் அக்​கறை கிடை​யாது. தங்​கள் குடும்ப நலன்​களில் மட்​டுமே அவர்​கள் அக்​கறை செலுத்​து​வார்​கள். தேசிய அளவில் மிகப்​பெரிய ஊழல் குடும்​ப​மாக காங்​கிரஸ் தலை​மை​யின் (சோனியா காந்​தி) குடும்​பம் உள்​ளது. இதே​போல பிஹார் அளவில் மிகப்​பெரிய ஊழல் குடும்​ப​மாக ஆர்​ஜேடி தலை​மை​யின் (லாலு பிர​சாத்) குடும்​பம் விளங்​கு​கிறது. இரு குடும்​பங்​களை சேர்ந்​தவர்​களும் ஊழல் வழக்​கு​களில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்​துள்​ளனர்.

கடந்த 20 ஆண்​டு​களாக பிஹார் தேர்​தலில் ஆர்​ஜேடி வெற்றி பெற​வில்​லை. ஆர்​ஜேடி​யின் கடந்த கால காட்​டாட்​சியை மக்​கள் ஒரு​போதும் மறக்க மாட்​டார்​கள். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி வரலாறு காணாத வெற்றி பெறும். அனைத்து தேர்​தல் சாதனை​களை​யும் முறியடிக்​கும். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

ஆர்​ஜேடி உடன் கைகோத்​தது தவறு: பிஹாரின் சமஸ்​திபூரில் நடந்த என்​டிஏ பிரச்​சார கூட்​டத்​தில் முதல்​வர் நிதிஷ் குமார் பேசி​ய​தாவது: ஆர்​ஜேடி​யின் 15 ஆண்டு கால ஆட்​சி​யில் பிஹார் மிக​வும் பின்​தங்​கிய நிலை​யில் இருந்​தது. கடந்த 2005-ம் ஆண்​டில் பிஹாரில் என்​டிஏ ஆட்​சிப் பொறுப்​பேற்​றது.

அப்​போது​முதல் மாநிலம் அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. நான் இரு​முறை ஆர்​ஜேடி உடன் கூட்​டணி அமைத்து மிகப்​பெரிய தவறு இழைத்​து​விட்​டேன்​. அந்​த தவறை இனிமேல்​ செய்​ய மாட்​டேன்​. இவ்​வாறு முதல்​வர்​ நிதிஷ் கு​மார்​ தெரிவித்​தார்.



Read More

Previous Post

எனது ராஜபக்ச: செவ்வந்தியின் தொலைபேசியில் நாமல் எம்.பியின் பெயரா..!

Next Post

மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிரபல கிரிக்கெட் வீரர்..? ரசிகர்கள் ஷாக்

Next Post
மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிரபல கிரிக்கெட் வீரர்..? ரசிகர்கள் ஷாக்

மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிரபல கிரிக்கெட் வீரர்..? ரசிகர்கள் ஷாக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin