• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘நேர்மையான நபர் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை’ – ED குறித்து பேசிய பிரதமர் மோடி – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
April 16, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
‘நேர்மையான நபர் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை’ – ED குறித்து பேசிய பிரதமர் மோடி – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த பத்தாண்டுகளாக நாட்டில் கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதில் அமலாக்க இயக்குனரகத்தின் (ED) பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களின் குரல்களை நசுக்க மத்திய அமைப்புகளைப் பா.ஜ.க பயன்படுத்துவதாக எழும் குற்றச்சாட்டுக்களை மறுத்த பிரதமர், ED இன் 97 சதவீத வழக்குகள் அரசியலில் ஈடுபடாதவர்களுக்கு எதிரானவை என்றும் விளக்கம் அளித்தார்.

ஒரு நேர்மையான நபர் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஆனால் ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு “பாப் கா தர்” (பாவ பயம்) இருக்கும் என்று பிரதமர் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது கூறினார் .

விளம்பரம்

எத்தனை எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் உள்ளனர்? யாரும் என்னிடம் சொல்வதில்லை. அதே எதிர்க்கட்சித் தலைவரா… அவர்களின் அரசாங்கத்தை நடத்துபவர்? பாவம் (பாப் கா தர் ஹை) பயம் உள்ளது. நேர்மையான நபருக்கு என்ன பயம்? நான் முதலமைச்சராக இருந்தபோது எனது உள்துறை அமைச்சரை சிறையில் அடைத்தனர். அரசியல் தலைவர்கள் 3 சதவீத அமலாக்க வழக்குகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர் என்பதையும், 97 சதவீத வழக்குகள் அரசியலில் சேராதவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் நாடு புரிந்து கொள்ள வேண்டும்” என்று பிரதமர் மோடி பேட்டியின் போது கூறினார்.

விளம்பரம்

ஊழலில் ஈடுபட்டுள்ள போதைப்பொருள் மாஃபியாக்கள் அல்லது பினாமி சொத்துக்களை உருவாக்கிய அதிகாரிகள் மீது ED இன் பெரும்பாலான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தனது ஆட்சிக் காலத்தில் மத்திய அமைப்பின் பணிகளைப் பாராட்டிய மோடி, “2014க்கு முன் ED 5000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மட்டுமே பறிமுதல் செய்தது. ED நடவடிக்கை எடுப்பதை யாரேனும் தடுத்தார்களா, அதனால் பயனடைந்தவர்கள் யார்? எனது ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது நாட்டு மக்களின் பணம் இல்லையா? என்று பிரதமர் வினவினார்.

விளம்பரம்

“கடந்த பத்து ஆண்டுகளில், நாங்கள் ரூ. 2,200 கோடி பணத்தை மீட்டுள்ளோம், 2014-க்கு முன், பள்ளிப் பையில் எடுத்துச் செல்லக்கூடிய ரூ. 34 லட்சம் ரொக்கத்தை மட்டுமே ED திரும்பப் பெற முடிந்தது… அதாவது ED நன்றாக வேலை செய்கிறது” என்று அவர் கூறினார்.

ஊழல் நாட்டை அழித்துவிட்டது என்றும், அதை முழு வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

“அவர்கள் (ED) மக்களைப் பிடித்து, பணத்தையும் கைப்பற்றியுள்ளனர், மேலும் ஊழல் நாட்டை அழித்துவிட்டது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ஊழலுக்கு எதிராக முழு பலத்துடன் போராட வேண்டும். மேலும் இது எனது நம்பிக்கை,” என்றார்.

விளம்பரம்

தேர்தல் கமிஷன் சீர்திருத்தங்கள் எனது அரசால்(மோடி) கொண்டு வரப்பட்டது. ‘குடும்பத்திற்கு’ நெருக்கமானவர்கள் தேர்தல் கமிஷனர்களாக ஆக்கப்பட்டனர், அவர்கள் பின்னர் ராஜ்யசபா மற்றும்  மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் கைது செய்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளை ஒடுக்க ஆளும் பாஜகவால் மத்திய ஏஜென்சிகளை இடைவிடாமல், அப்பட்டமாக, சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டி இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் குழு இந்தியத் தேர்தல் ஆணையத்தை அணுகியது

இதையும் படிங்க:  
பிரதமர் மோடியின் கியாரண்டியை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை – மல்லிகார்ஜுன கார்கே

விளம்பரம்

நாட்டில் அனைவருக்கும் சமநிலையான போட்டியையை அளித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

இஸ்ரேல்,ஈரான் போர் எதிரொலி : மூன்றாவது உலகப்போர் வெடிக்குமா..!

Next Post

வலியில் துடித்த அஸ்வின்.. ஈவு இரக்கமே காட்டாமல் கத்திய ஆஸி. கேப்டன்! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post
வலியில் துடித்த அஸ்வின்.. ஈவு இரக்கமே காட்டாமல் கத்திய ஆஸி. கேப்டன்! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

வலியில் துடித்த அஸ்வின்.. ஈவு இரக்கமே காட்டாமல் கத்திய ஆஸி. கேப்டன்! - Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin