Last Updated:
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 246 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி விளையாடிய போது மழை குறுக்கிட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக மாறி வரும் அபிஷேக் சர்மா தனது சகோதரியின் திருமணத்தில் பங்கேற்பதை தவிர்த்து வீடியோ காலில் வாழ்த்து கூறியுள்ளார்.
இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். முதல் பந்திலிருந்தே சிக்சரும் பவுண்டரியுமாக விளாசக் கூடிய அபிஷேக் சர்மா, சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது அதிரடியான பேட்டிங்கால் அணிக்கு பலம் சேர்த்தார்.
ஆசிய கோப்பை தொடரில் மட்டும் அவர் மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி 314 ரன்கள் குவித்திருந்தார். ஆசிய கோப்பை தொடரை அடுத்து, இந்தியா ஏ அணி தற்போது ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது.
கான்பூரில் நேற்று 2ஆவது ஒருநாள் போட்டி இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதற்கிடையே அபிஷேக் சர்மாவின் சகோதரி கோமல் சர்மாவின் திருமணம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்றது. அபிஷேக் சர்மா இந்தியா ஏ அணியில் இடம்பெற்று ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதால், அவரால் திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை.
இதையடுத்து தனது சகோதரிக்கு வீடியோ காலில் அபிஷேக் சர்மா வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
இதையடுத்து ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி பெறுவதற்கு 25 ஓவர்களில் 160 ரன்கள் எடுக்க வேண்டும் என்று டார்கெட் மாற்றப்பட்டது. இந்த இலக்கை 16.4 ஓவர்களில் 1 விக்கெட் இழந்திருந்தபோது ஆஸ்திரேலியா ஏ அணி அடைந்து வெற்றி பெற்றது.
October 04, 2025 7:18 PM IST


