Last Updated:
அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 2 சிக்சர் 3 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் பேட்டர்கள் களம் இறங்கியுள்ளனர். 50 ஓவர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 8 அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் இலங்கையை வென்றிருந்த நிலையில் இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீராங்கனைகள் பிரதிகா ராவல் 31 ரன்களும், ஸ்மிருந்தி மந்தனா 23 ரன்களும் எடுத்தனர். அடுத்த வந்த ஹர்லீன் தியோல் 46 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 19 ரன்களும் சேர்த்தனர்.
ஜெமிமா ரோட்ரிகஸ் 32 ரன்களும், தீப்தி சர்மா 25 ரன்களும் சேர்க்க ஸ்னே ரானா 20 எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 2 சிக்சர் 3 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார்.
50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 247 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் டியானா பேக் 4 விக்கெட்டுகளையும், சாதியா இக்பால் மற்றும் பாதிமா சனா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
October 05, 2025 7:32 PM IST


