• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியா-ஆப்கானிஸ்தான் கூட்டறிக்கைக்கு ஆட்சேபனை: ஆப்கன் தூதரிடம் பாகிஸ்தான் கண்டனம் | Objection to India Afghanistan Joint Statement Pakistan summons Afghan envoy to condemn

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இந்தியா-ஆப்கானிஸ்தான் கூட்டறிக்கைக்கு ஆட்சேபனை: ஆப்கன் தூதரிடம் பாகிஸ்தான் கண்டனம் | Objection to India Afghanistan Joint Statement Pakistan summons Afghan envoy to condemn
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்லாமாபாத்: இந்தியா வந்துள்ள ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முட்டாகி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இதனையடுத்து வெளியிடப்பட்ட இந்தியா-ஆப்கானிஸ்தான் கூட்டறிக்கை குறித்து தனது “வலுவான ஆட்சேபனைகளை” தெரிவிக்க ஆப்கானிஸ்தான் தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

ஆறு நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமையன்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி புதுடெல்லிக்கு வந்தார். அதனை தொடர்ந்து அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.

முட்டாகியின் இந்திய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்புக்குப் பின்னர் இரு நாடுகளின் சார்பில் வெளியான கூட்டு அறிக்கையில், ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை ஆப்கானிஸ்தான் கடுமையாகக் கண்டித்துள்ளது, மேலும் இந்திய மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இரங்கல் மற்றும் ஒற்றுமைக்கான ஆதரவை தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதன் அடையாளமாக, பிராந்திய நாடுகளிலிருந்து வெளிப்படும் அனைத்து பயங்கரவாதச் செயல்களையும் இரு தரப்பினரும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்தனர். மேலும், பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் பிரதேசத்தைப் பயன்படுத்த அனுமதிக்காது என்று முட்டாகி கூறினார்.

இந்த சூழலில் பயங்கரவாதம் பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினை என்ற முட்டாகியின் கருத்தை அந்த நாடு கண்டித்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் குறித்து கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குறிப்புகள் தொடர்பாக பாகிஸ்தானின் வலுவான ஆட்சேபனைகளை ஆப்கானிஸ்தான் தூதரிடம் கூடுதல் வெளியுறவு செயலாளர் (மேற்கு ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான்) தெரிவித்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தனது அறிக்கையில்,” பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பாகிஸ்தானின் மீது மாற்றுவதன் மூலம், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான கடமைகளிலிருந்து ஆப்கானிஸ்தான் அரசு விலகிக்கொள்ள முடியாது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக கிட்டத்தட்ட நான்கு மில்லியன் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு எங்கள் நாடு அடைக்கலம் அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பிய நிலையில், எங்கள் நாட்டில் வசிக்கும் அங்கீகரிக்கப்படாத ஆப்கானிய நாட்டினர் அவர்களின் தாயகம் திரும்ப வேண்டும்.

மற்ற எல்லா நாடுகளையும் போலவே, பாகிஸ்தானும் அதன் எல்லைக்குள் வசிக்கும் வெளிநாட்டினரின் இருப்பை ஒழுங்குபடுத்தும் உரிமையைக் கொண்டுள்ளது. இஸ்லாமிய சகோதரத்துவம் மற்றும் நல்ல அண்டை நாடுகளுடனான நல்லுறவுகள் என்ற உணர்வில் ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு மருத்துவம் மற்றும் கல்வி விசாக்களை தொடர்ந்து வழங்கி வருகிறோம். அமைதியான, நிலையான, பிராந்திய ரீதியாக இணைக்கப்பட்ட மற்றும் வளமான ஆப்கானிஸ்தானைக் காண பாகிஸ்தான் விரும்புகிறது’ எனத் தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

ஒரு பவுன் ரூ.95,000-ஐ நெருங்கியது தங்கம் விலை: வியாபாரிகள் சொல்வது என்ன? | Gold price hikes continues

Next Post

ஆன்லைன் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக குற்றங்களுக்காக ஆறு சிறார்கள் உட்பட 31 பேர் கைது – ஐஜிபி | Makkal Osai

Next Post
ஆன்லைன் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக குற்றங்களுக்காக ஆறு சிறார்கள் உட்பட 31 பேர் கைது – ஐஜிபி | Makkal Osai

ஆன்லைன் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக குற்றங்களுக்காக ஆறு சிறார்கள் உட்பட 31 பேர் கைது - ஐஜிபி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin