Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தில் ஹமாஸ், இஸ்ரேல் ஒப்புதல், கைதி பரிமாற்றம், போர்நிறுத்தம் குறித்து இன்று உலக மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அமெரிக்க விதித்த கெடு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள சூழலில், ஹமாஸ் அமைப்பின் முடிவு குறித்து உலகநாடுகளிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் இஸ்ரேல், காசா போரினை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் 20 அம்சங்கள் உள்ள அமைதி திட்டத்தை முன்மொழிந்தார். இதற்கு இஸ்ரேல் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் வழங்க இன்றுமாலை 6 மணி வரை அவகாசம் அளிப்பதாக காலக்கெடு விதித்திருந்தார்.
அமைதி திட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த ஹமாஸ், சில விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், கைதிகள் பரிமாற்றத்திற்கான “ஆரம்ப விலகல் பாதைக்கு” இஸ்ரேல் ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் உறுதிப்படுத்தியதும், போர்நிறுத்தம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும், பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடங்கும் என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனிடையே, மிக முக்கியமான சாதனையின் விளிம்பில் இஸ்ரேல் இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதியாகவிட்டாலும், அனைத்து பாலஸ்தீன பணயக் கைதிகளையும் விடுவிப்பதாக அறிவிப்பேன் என்று அவர் தெரிவித்தார். மேலும், ஹமாஸின் தாமதங்கள் அல்லது ஏய்ப்புகளை அதிபர் டிரம்ப் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பதால், பேச்சுவார்த்தை செயல்முறையை குறுகியதாக மாற்றுமாறு பேச்சுவார்த்தை குழுவிற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
October 05, 2025 8:01 AM IST
அமெரிக்க விதித்த கெடு இன்றுடன் நிறைவு.. ஹமாஸ் அமைப்பின் முடிவு குறித்து எதிர்பார்ப்பு!


