Last Updated:
இந்திய விளம்பர துறையில் ஜாம்பவான் என்று அழைக்கப்பட்ட பியூஷ் பாண்டே காலமானார். அவருக்கு வயது 70.
இந்திய விளம்பர துறையில் ஜாம்பவான் என்று அழைக்கப்பட்ட பியூஷ் பாண்டே காலமானார். அவருக்கு வயது 70.
விளம்பரத்துறையில் மக்களை ஈர்க்கும் ‘வாசகம்’ மூலம் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பியூஷ் பாண்டே. டைரி மில்க், ஏசியன் பெயிண்ட்ஸ், வோடோபோன் பக் நாய்க்குட்டி உள்ளிட்ட பல்வேறு விளம்பரங்களை உருவாக்கியவர் பியூஷ் பாண்டே. இந்திய விளம்பரத்துறையில் முன்னோடியாக திகழ்ந்தார். ஏசியன் பெயின்ட்டுக்கு இவரின் ‘மகிழ்ச்சிக்கும் நிறமுண்டு’ என இந்தியில் இவர் உருவாக்கிய வாசகம் மிகவும் பிரபலம்.
2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது இவர் உருவாக்கிய ஆப் கி பார் மோடி சர்கார் என்ற வாசகம், பிரதமர் மோடியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியதாக கூறப்பட்டது. பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
Shri Piyush Pandey Ji was admired for his creativity. He made a monumental contribution to the world of advertising and communications. I will fondly cherish our interactions over the years. Saddened by his passing away. My thoughts are with his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) October 24, 2025
பியூஷ் பாண்டே மறைவுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பியூஸ் பாண்டே தனது படைப்பாற்றலுக்காக என்னென்றும் போற்றப்படுவார். விளம்பரம் மற்றும் தொலைதொடர்பு துறையில் மகத்தான பங்களிப்பை வழங்கியவர். அவரது மறைவு வருத்தமடையச் செய்கிறது. குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.
October 24, 2025 12:31 PM IST
‘ஆப் கி பார் மோடி சர்கார்’ வாசகத்தை உருவாக்கிய விளம்பரத்துறை ஜாம்பவான் காலமானார் – பிரதமர் இரங்கல்!


