TOTO: யார் வெல்லப்போவது என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேற்றைய (அக்.23) டோட்டோ டிராவில் முதல் பரிசான S$12.43 மில்லியனை மூவர் தட்டிச் சென்றனர்.
வெற்றி பெற்ற 3 டிக்கெட்டுகளும் இணையம் வழியாக வாங்கப்பட்டதாக Singapore Pools தெரிவித்துள்ளது.
இந்த ஜாக்பாட் லாட்டரியில் முதல் பரிசுத் தொகை S$12,427,689 என்ற உச்சத்தை தொட்டது.
முதல் பரிசை வெற்றி பெற்ற மூவருக்கும் தலா S$4.14 மில்லியன் கிடைக்கும்.

இதில் வெற்றி பெற்ற எண்கள் 7, 14, 17, 18, 31, 38 மற்றும் கூடுதல் எண் 46 ஆகும்.
மேலும், “குரூப் 2” இரண்டாம் பரிசை 10 பேர் வென்றனர், ஒவ்வொருவருக்கும் தலா S$139,191 வரை பங்கு கிடைக்கும்.

