• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்தியா உடனான ஒருநாள் தொடரை வென்றது ஆஸி: 2-வது போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி | australia won odi series against team india

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இந்தியா உடனான ஒருநாள் தொடரை வென்றது ஆஸி: 2-வது போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி | australia won odi series against team india
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அடிலெய்டு: இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 2 விக்​கெட்​ வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட தொடரை 2-0 என கைப்​பற்​றியது.

அடிலெய்டு ஓவல் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற 2-வது போட்​டி​யில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்புக்கு 264 ரன்​கள் எடுத்​தது. தனது 59-வது அரை சதத்தை அடித்த ரோஹித் சர்மா 97 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 73 ரன்​கள் எடுத்​தார். ஸ்ரேயஸ் ஐயர் 77 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 61 ரன்​களும், அக்​சர் படேல் 41 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 44 ரன்​களும் சேர்த்​தனர்.

கேப்​டன் ஷுப்​மன் கில் 9 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார். சீனியர் நட்​சத்​திர பேட்​ஸ்​மே​னான விராட் கோலி 4 பந்​துகளை சந்​தித்து ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் சேவியர் பார்ட்​லெட் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். கே.எல்​.​ராகுல் 11, வாஷிங்​டன் சுந்​தர் 12, நிதிஷ் குமார் ரெட்டி 8 ரன்​களில் நடையை கட்​டினர். இறு​திக்​கட்​டத்​தில் ஹர்​ஷித் ராணா 18 பந்​துகளில் 3 பவுண்​டரி​களு​டன் 24 ரன்​களும், அர்​ஷ்தீப் சிங் 14 பந்​துகளில் 13 ரன்​களும் சேர்த்து பலம் சேர்த்​தனர். 9-வது விக்​கெட்​டுக்கு இந்த ஜோடி 37 ரன்​கள் சேர்த்​தது.

பந்து வீச்​சில் ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் ஆடம் ஸாம்பா 4, சேவியர் பார்ட்​லெட் 3, மிட்​செல் ஸ்டார்க் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 266 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி 46.2 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 265 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. மேத்யூ ஷார்ட் 78 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 74 ரன்​களும், 22 வயதான இடது கை பேட்​ஸ்​மே​னான கூப்​பர் கானொலி 53 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 61 ரன்​களும், மிட்​செல் ஓவன் 23 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 36 ரன்​களும் விளாசி அணி​யின் வெற்​றியில் முக்​கிய பங்கு வகித்​தனர்.

கேப்​டன் மிட்​செல் மார்ஷ் 11, டிரா​விஸ் ஹெட் 28, அலெக்ஸ் கேரி 9, மேட் ரென்ஷா 30, சேவியர் பார்ட்​லெட் 3, மிட்​செல் ஸ்டார்க் 4 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். இந்​திய அணி தரப்​பில் அர்​ஷ்தீப் சிங், ஹர்​ஷித் ராணா, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். முகமது சிராஜ், அக்​சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். இந்த தோல்​வி​யால், கடந்த 17 வருடங்​களாக அடிலெய்டு மைதானத்​தில் நடை​பெற்ற ஒரு​நாள் போட்​டிகளில் தோல்வி அடை​யாமல் இருந்த இந்​திய அணி​யின் சாதனை முடிவுக்கு வந்​தது.

மிட்​செல் ஓவன், கூப்​பர் கானொலி ஜோடி ஒரு கட்​டத்​தில் அதிரடி​யாக விளை​யாடி 6.3 ஓவர்​களில் 59 ரன்​களை விளாசி அணி​யின் வெற்​றியை எளி​தாக்​கியது. ஆஸ்​திரேலிய அணி கடைசி​யாக விளை​யாடிய 3 ஒரு​நாள் போட்​டி தொடர்​களை இழந்த நிலை​யில் தற்​போது வெற்றி பெற்​றுள்​ளது.

2 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை 2-0 என கைப்​பற்​றியது. ஆட்ட நாயக​னாக ஆடம் ஸாம்பா தேர்​வா​னார். பெர்த்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் அந்த அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது.

தோல்விக்கு என்ன காரணம்?

>ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் ரன்கள் சேர்க்க தடுமாறினார்கள். ஒருவேளை நிதிஷ்குமார் ரெட்டிக்கு பதிலாக குல்தீப் யாதவை இந்திய அணியில் சேர்த்திருந்தால் பலன் கிடைத்திருக்கும். நிதிஷ் குமார் பேட்டிங்கில் 8-வது வீரராக களமிறங்கி 10 முதல் 12 பந்துகளையே எதிர்கொள்கிறார். பந்து வீச்சில் 3 முதல் 4 ஓவர்களை மட்டுமே வீசுகிறார்.

>ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்த போதிலும் இளம் வீரர்களான மேத்யூ ஷார்ட், மிட்செல் ஓவன், கூப்பர் கானொலி ஆகியோர் அருமையாக விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தனர்.

>மிட்செல் ஓவன் 23 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

>மேத்யூ ஷார்ட் 23 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை அக்சர் படேலும், 55 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை முகமது சிராஜும் பிடிக்கத் தவறினர். இதை பயன்படுத்திக் கொண்ட மேத்யூ ஷார்ட் 74 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஆஸி.​யில் ஆயிரம் ரன்​கள்: அடிலெய்​டில் நேற்று நடை​பெற்ற ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தொடக்க வீர​ரான ரோஹித் சர்மா 73 ரன்​கள் எடுத்​தார். அவர், 2 ரன்​களை எடுத்​திருந்த போது ஆஸ்​திரேலிய மண்​ணில் ஒரு​நாள் போட்​டிகளில் ஆயிரம் ரன்​களை குவித்த முதல் இந்​திய வீரர் என்ற சாதனையை படைத்​தார். அங்கு 21 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள ரோஹித் சர்மா 56.36 சராசரி​யுடன் 1,071 ரன்​கள் சேர்த்​துள்​ளார். இதில் 4 சதங்​கள், 3 அரை சதங்​கள் அடங்​கும். ஸ்டிரைக் ரேட் 89.32 ஆகும். அதி​கபட்ச ரன்​கு​விப்பு 171*.

2-வது முறை​யாக ‘0’: ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ராக பெர்த்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் 8 பந்​துகளை சந்​தித்து ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்த விராட் கோலி, நேற்று அடிலெய்​டில் நடை​பெற்ற 2-வது போட்​டி​யில் 4 பந்​துகளை சந்​தித்து ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்​தார். 36 வயதான விராட் கோலி, ஒரு​நாள் போட்​டிகளில் அடுத்​தடுத்த ஆட்​டங்​களில் ரன் எடுக்​காமல் ஆட்​ட​மிழப்​பது இதுவே முதன்​முறை​யாகும்.

கங்​குலியை முந்​தி​னார் ரோஹித் சர்மா: ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் போட்​டி​யில் இந்​திய அணி​யின் தொடக்க வீர​ரான ரோஹித் சர்மா 97பந்​துகளில் 73 ரன்​கள் எடுத்​தார். இதன் மூலம் ஒரு​நாள் போடடிகளில் அதிக ரன்​கள் குவித்த இந்​திய வீரர்​களின் பட்​டியலில் சவுரவ் கங்​குலியை பின்​னுக்​குத் தள்ளி 3-வது இடத்தை பிடித்​துள்​ளார் ரோஹித் சர்​மா.

ரோஹித் சர்மா 275 போட்​டிகளில் விளை​யாடி 11,249 ரன்​கள் குவித்​துள்​ளார். சராசரி 48.69 ஆகும். 32 சதங்​கள், 59 அரை சதங்​கள் அடித்​துள்​ளார். அதி​கபட்ச ரன் குவிப்பு 264 ஆகும். கங்​குலி 308 போட்​டிகளில் விளை​யாடி 40.95 சராசரி​யுடன் 11,121 ரன்​கள் குவித்​திருந்​தார். இதில் 22 சதங்​கள், 71 அரை சதங்​கள் அடங்​கும். இந்த வகை சாதனை​யில் சச்​சின் டெண்​டுல்​கர் (18,426) முதலிடத்​தி​லும், விராட் கோலி (14,181) 2-வது இடத்​தி​லும் உள்​ளனர்.

17 டாட் பால்​கள்: இந்​திய அணி​யின் பேட்​டிங்​கின் போது தொடக்க ஓவர்​களில் ஆஸ்​திரேலி​யா​வின் ஜோஷ் ஹேசில்​வுட் அழுத்​தம் கொடுத்​தார். குறிப்​பாக ரோஹித் சர்​மாவை கடுமை​யாக சோதனைக்கு உட்​படுத்​தி​னார். ஹேசில்​வுட்​டுக்கு எதி​ராக தொடர்ச்​சியாக 17 பந்​துகளில் ரோஹித் சர்மா ஒரு ரன் கூட எடுக்​க​வில்​லை. ஹேசில்​வுட் 2 ஓவர்​களை மெய்​டன்​களாக வீசி அசத்​தி​யிருந்​தார்​. 10 ஓவர்​களை வீசி​ய அவர்​, 29 ரன்​களை மட்​டுமே வழங்​கியிருந்தார்.



Read More

Previous Post

ஏஐ மூலம் மாணவிகளின் ஆபாசப் படங்களை உருவாக்கிய ஐஐடி மாணவர் கைது! | இந்தியா

Next Post

Gold | இனி தங்கம், வெள்ளி வாங்க வேண்டாம்.. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த உலோகத்துக்கு தான் மவுசு.. தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! | வணிகம்

Next Post
Gold | இனி தங்கம், வெள்ளி வாங்க வேண்டாம்.. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த உலோகத்துக்கு தான் மவுசு.. தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! | வணிகம்

Gold | இனி தங்கம், வெள்ளி வாங்க வேண்டாம்.. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த உலோகத்துக்கு தான் மவுசு.. தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin