“அடுத்த தலைமுறை போர்கள் துப்பாக்கிகளாலோ, ஏவுகணைகளாலோ இருக்காது. சைபர் தாக்குதல்களும், பயோ-வெப்பன்களும் பயன்படுத்தப்படும்’ எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக காதலையும், செக்ஸையும் உளவு பார்க்கும் போர் ஆயுதமாக பயன்படுத்துவதாகக் எச்சரித்துள்ளது அமெரிக்க உளவுத்துறை.
சிலிக்கான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் அந்த வல்லுநர், ஒரு கூட்டத்தில் அப்பெண்ணை சந்திக்கிறார். அப்பெண் புத்திசாலியாகவும், வசீகரமாகவும், அவனது வேலையில் உண்மையான ஆர்வமுள்ளவளாகவும் தெரிகிறார். அவர்களுக்குள் தொடர்பு ஏற்படுகிறது. பல வருடங்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் தொழில்நுட்ப எல்லையிலிருந்து ரகசியங்களை எடுத்து அனுப்ப, வடிவமைக்கப்பட்டு திட்டமிடப்பட்ட உளவுத்துறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக அப்பெண் இருப்பதை அந்த வல்லுநர் உணர்கிறார். இதுதான் இன்றைய சிலிக்கான் பள்ளத்தாக்கில் உளவு பார்ப்பதன் யதார்த்தம் என்கிறார்கள். இவை அனைத்தும் தற்செயலாகவே நடப்பது போல் நடக்கும். ஆனால் எல்லாம், நங்கு திட்டமிடப்பட்டது என்பது தான் அதிர்ச்சியான தகவல்.
குறிப்பாக சிலிக்கான் பள்ளத்தாக்குப் போன்ற தொழில்நுட்ப மையங்களில் உயர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், வியாபார ரகசியங்கள், அரசின் ரகசியங்களை கண்டறிய அழகிய பெண்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளனர். காதல், பழக்கவழக்கத்துடன் தொடங்கும் இதனை சில நேரங்களில் நீண்டகாலத் தொடர்பில் இருப்பதற்காகக் குழந்தை பெற்றுக்கொள்வதுவரை கொண்டுசெல்லலாம் என்கின்றனர்.
இந்த உளவாளிகள் பெரு நிறுவனங்கள் முதல் ஸ்டார்ட்-அப்கள் வரை பணியாற்றும் எஞ்சினியர்களைக் குறிவைக்கின்றனர். உடலுறவை அதன்பாலான நம்பிக்கையைப் பயன்படுத்தி உளவுபார்த்தல் sexpionage என அழைக்கப்படுகிறது.

