Last Updated:
தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதம் ஆய்வுக்காக மத்திய அரசு மூன்று குழுக்களை அமைத்தது. விவசாயிகள் 22 சதவீதம் கோரிக்கை வைத்தனர். குழுக்கள் விரைவில் ஆய்வு நடத்தும்.
தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தீவிரமடைந்ததால், டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் நனைந்தன. 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் மட்டும் கொள்முதல் நிலையங்களில் எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், அதனை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில், நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு, தலா மூன்று பேர் அடங்கிய மூன்று குழுக்களை அமைத்துள்ளது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :
October 23, 2025 8:07 PM IST


