Last Updated:
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் டிரம்ப் உட்பட 338 பேர் பரிந்துரையில் இருந்த நிலையில், வெனிசுலா பெண் போராளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பெண் போராளி மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக மருத்துவம், இலக்கியம் உள்ளிட்டத் துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்தியா – பாக் உள்ளிட்ட உலகம் முழுக்க மொத்தம் 7 போர்களை தடுத்து நிறுத்தினேன். எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது விருப்பத்தை வெளிப்படுத்திவந்தார்.
அதேபோல், அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட 338 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், வெனிசுலாவில் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய பெண் போராளி மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
October 10, 2025 2:49 PM IST
Nobel Prize : பெரிதும் எதிர்பார்த்த டிரம்புக்கு ஏமாற்றம்! அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் வெனிசுலா பெண் போராளி


