• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தற்காலிக பணியாளர்களுக்கு அரசு நிரந்தர வேலை – தேர்தல் வாக்குறுதியாக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தற்காலிக பணியாளர்களுக்கு அரசு நிரந்தர வேலை – தேர்தல் வாக்குறுதியாக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 22, 2025 3:00 PM IST

பிகார் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் Jeevika Didis நிரந்தர அரசு வேலை, ரூ.30000 சம்பளம் என வாக்குறுதி அளித்துள்ளார்.

News18
News18

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தின் ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்கப்படும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

243 தொகுதிகளை கொண்ட பிகாரில் அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. அதனைத் தொடர்ந்து, 143 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை செவ்வாயன்று ராஷ்டிரிய ஜனதா தளம் வெளியிட்டது. அதேபோல், கூட்டணி கட்சிகளான காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

ஐக்கிய ஜனதாதளம், பாஜக ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு முறையாக முடிக்கப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து இரு கூட்டணியினரும், சுயேச்சைகளும், மற்ற கட்சியினரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து, தற்போது தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், “நாங்கள் ஆட்சி அமைத்த உடன், Jeevika Didis (Community Mobilisers) நிரந்தரமாக்கப்பட்டு அரசு ஊழியர்களாக கருதப்படுவார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். Jeevika Didi’s வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, ஜீவிகா தீதிஸுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். கூடுதலாக ரூ.2,000 உதவித்தொகையும் வழங்கப்படும். அனைத்து ஜீவிகா தீதிகளுக்கும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பீடு கிடைக்கும்” எனக் கூறினார். சுமார் 1 கோடி பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் கூறிய நிலையில், இந்த அறிவிப்புகளை தேஜஸ்வி யாதவ் வெளியிட்டார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 22, 2025 3:00 PM IST

Read More

Previous Post

தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தெரிவு

Next Post

ஒருநாள் போட்டியில் 92 ஓவர்கள் ஸ்பின் – வரலாற்று நிகழ்வுடன் சூப்பர் ஓவரில் மே.இ.தீவுகள் வெற்றி! | 92 overs of spin in ODI west indies team wins in Super Over with historic feat

Next Post
ஒருநாள் போட்டியில் 92 ஓவர்கள் ஸ்பின் – வரலாற்று நிகழ்வுடன் சூப்பர் ஓவரில் மே.இ.தீவுகள் வெற்றி! | 92 overs of spin in ODI west indies team wins in Super Over with historic feat

ஒருநாள் போட்டியில் 92 ஓவர்கள் ஸ்பின் - வரலாற்று நிகழ்வுடன் சூப்பர் ஓவரில் மே.இ.தீவுகள் வெற்றி! | 92 overs of spin in ODI west indies team wins in Super Over with historic feat

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin