சிலம்பம் என்பது தற்காப்பு கலைமட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும் மாணவர்களிடையே உறுதிப்படுத்துகிறது. இதுமட்டுமல்லாமல் பல பேருக்கு நல்ல வாழ்க்கையே சிலம்பம் ஏற்படுத்தி தந்துள்ளது.தற்போது சிலம்பம்விளையாட்டுப் போட்டியில், சிறந்து விளங்கும் நபர்களுக்கு அரசு வேலைகள் கிடைப்பதற்கும் வழி வகை உள்ளது.
மேலும் சிலம்பத்தைப் பொறுத்தவரையில் 6 வயது சிறுவன் முதல் 60 வயது பெரியவர் வரை சிலம்பம் கற்றுக் கொள்ளலாம். தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சிலம்பம் விளையாட்டு பயிற்சி வகுப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுமக்களும் அழிந்து வரும் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் விழுப்புரம் நகர மக்கள் தன்னுடைய பிள்ளைகளை எதற்காக சிலம்பம் பயிற்சி விளையாட்டிற்கு அனுப்புகிறார்கள் என பல கருத்துக்களை நம்மிடம்பகிர்ந்து உள்ளார்கள். அவர்கள் கூறியதாவது:
முதலில் குழந்தைகளை சிலம்பம் விளையாட்டு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவது, குழந்தைகள் உடல் வலிமை மற்றும் மனவலிமை பெறுகிறார்கள். சிலம்பம் விளையாட்டு மூலம் குழந்தைகளுக்கு எந்த ஒரு செயல் செய்வதற்குபக்குவம் வருகிறது. அதுபோல எந்த ஒரு செயல் செய்தாலும் கவனத்துடன் செய்வார்கள். மேலும் உடல் நலம்சிறப்பாக செயல்படும்.
அதுமட்டுமல்லாமல்சிலம்பம் விளையாட்டு மூலம்அரசாங்க வேலைகள் கூட கிடைக்கிறது. இதற்காகவும் நாங்கள் எங்களுடைய பிள்ளைகளை ஆயத்தப்படுத்துகிறோம் எனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். குறிப்பாக பெண் பிள்ளைகள் சிலம்பம் கற்றுக் கொண்டால், தனக்கு வரும் ஆபத்துகளில் இருந்து அவர்கள் தங்களை தானாகவே தற்காத்துக் கொள்வார்கள். அதுபோல நேரம் தவறாமையை சரியாக பயன்படுத்துவார்கள். முக்கியமாக நம்முடைய பாரம்பரிய கலைகளை அழியாமல் அடுத்த தலைமுறையினருக்கு அளிப்பதேமுக்கிய நோக்கம் என பெற்றோர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)