Last Updated:
Air Pollution | டெல்லியில் தீபாவளி பசுமை பட்டாசுகள் அனுமதிக்கப்பட்டும், காற்று மாசுபாடு உலக சுகாதார நிறுவனம் அளவுக்கு 15 மடங்கு அதிகம். BJP ஆம் ஆத்மி அரசுகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டின.
பட்டாசு புகையால் டெல்லியில் காற்று மாசுபாடு, உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்ததை விட 15 மடங்கு அதிகரித்தது.
டெல்லியில் இந்த முறை தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இரவு 8 மணி முதல் 10 மணிவரை பட்டாசுகளை வெடிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், அது மீறப்பட்டதாகவே கூறப்படுகிறது.
மாநகரெங்கும் புகை சூழ்ந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, ஒரு கன அடிக்கு 228 மைக்ரோகிராம் மாசு பதிவாகி இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
உலக சுகாதார நிறுவனம் அனுமதித்துள்ள அளவுடன் ஒப்பிடும்போது, இது 15 மடங்கு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IQ AIR என்ற நிறுவனம் வெளியிட்ட தரவிலும், டெல்லியில் காற்று தர குறியீடு 429ஆக இருந்தது. உலகின் முக்கிய 120 நகரங்களில் மிக மோசமான காற்று தர குறியீடாக இது பதிவாகி, மாசுபட்ட நகரங்களில் முதலாவதாக டெல்லி இருந்தது.
அதே சமயம், ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளே இதற்கு காரணம் என்றும், தீபாவளி பண்டிகை மீது பழி சுமத்துவதை நிறுத்துமாறும் பாஜக விமர்சித்துள்ளது.
October 21, 2025 4:42 PM IST


