ஷா ஆலாம்:
மண் ஏற்றிச் சென்ற லோரி மீது கார் மோதியதில் நால்வர் காயமடைந்தனர் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இன்று காலை கிள்ளான், ஜாலான் மேரு – காப்பார் அருகே இந்த விபத்து ஏற்பட்டது. காலை 9.07 மணிக்கு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மீட்புக் குழுவினர் உடனடியாக இடத்திற்கு விரைந்தனர்.
மொத்தம் நான்கு வாகனங்கள் — ஒரு மண் லோரி, ஒரு குப்பை லோரி மற்றும் இரண்டு பெரோடுவா மைவி கார்கள் — இந்த விபத்தில் ஈடுபட்டிருந்தன.
விசாரணையில் மூன்று வெளிநாட்டு ஆண்கள் மற்றும் 34 வயது உள்ளூர் பெண் ஒருவர் காயமடைந்தது தெரியவந்தது.
தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் வாகனங்களில் இருந்து மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
The post காப்பார் அருகே பல வாகனங்கள் மோதிய விபத்தில் நால்வர் காயம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

