• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வெள்ளரிக்காயை சுத்தம் செய்ய உமிழ்நீர்… வெளியான அதிர்ச்சி வீடியோ! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வெள்ளரிக்காயை சுத்தம் செய்ய உமிழ்நீர்… வெளியான அதிர்ச்சி வீடியோ! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 21, 2025 8:11 AM IST

தெருக்களில் விற்கப்படும் இத்தகைய உணவுப் பொருட்கள், பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இல்லாமல் இருக்கும் வகையிலான கடுமையான விதிமுறைகளை அரசு விதிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

News18News18
News18

தெருவோர வியாபாரி ஒருவர் வெள்ளரிக்காய்களை விற்பனை செய்வதற்கு முன்பு அவற்றை தனது வாயில் வைத்து உமிழ்நீரால் நனைத்த காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தக் காணொளி தெருவோர வியாபாரிகளிடையே தூய்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட வீடியோவின்கீழ் தெருக்களில் விற்கப்படும் இத்தகைய உணவுப் பொருட்கள், பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இல்லாமல் இருக்கும் வகையிலான கடுமையான விதிமுறைகளை அரசு விதிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வைரலாகும் அந்த வீடியோவின்படி கடற்கரையில் இரு இளைஞர்கள் வெள்ளரிக்காய் விற்கின்றனர். ஒருவர் ஸ்டூலில் அமர்ந்திருக்க மற்றொருவர் அருகில் நிற்கிறார். அவர்களில் நின்று கொண்டிருந்த இளைஞர், ஒரு வெள்ளரிக்காயை எடுத்து வாயில் வைத்து சிறிது நேரம் அதை உறிஞ்சி, பின்னர் கைகளில் உமிழ்நீரைத் தேய்த்து பின் ஒரு கூடையில் அதை விற்பனைக்கு அடுக்கி வைத்துள்ளார். தொடர்ந்து, கூடையிலிருந்து மற்றொரு வெள்ளரிக்காயை எடுத்து வெட்டி விற்பனைக்கு அதைyஉம் வைக்கிறார்.

இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது இன்னும் தெரியவரவில்லை. அக்டோபர் 10 ஆம் தேதி அன்று பகிரப்பட்ட இந்த வீடியோ, 6 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த சுகாதாரமற்ற நடைமுறையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதில் பயனரொருவர், “காய்கறிகளை வாங்கிய பிறகு நன்கு கழுவுவது மிகவும் முக்கியம்” என்று கூறியுள்ளார். மற்றொருவர், “இதனால்தான் நான் வெளி உணவு சாப்பிடுவதில்லை” என்று கூறியுள்ளார். ​​இன்னொரு பயணர், “அவர் சுத்தம் செய்யவில்லை, அதனால்தான் வெள்ளரிக்காயின் தோலை உமிழ்நீரால் பாலிஷ் செய்கிறார்” என்று கேலி செய்தார். இந்த வீடியோ பழையதாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் தற்போது வைரலாகி சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்களை பெற்றுவருகிறது.

இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதன்முறை அல்ல. சில நாட்களுக்கு முன்பு, உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து வந்த வேறொரு அதிர்ச்சியூட்டும் வீடியோவும் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த வீடியோவின்படி உள்ளூர் ஜூஸ் விற்பனையாளர் ஒருவர், தனது வண்டியின் அருகில் சுகாதாரமற்ற முறையில் தனது அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்யப் பயன்படுத்திய அதே துணியால் பழச்சாறு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களைத் துடைத்துக் கொண்டிருந்தார். இந்தச் செயலை நேரில் பார்த்த ஒரு பெண், அந்தக் காட்சிகளை கேமராவில் படம் பிடித்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ச்சியான இதுபோன்ற சம்பவங்கள், சாலையோரக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 21, 2025 8:11 AM IST



Read More

Previous Post

Tamilmirror Online || இலங்கை மகளிர் அணிக்கு வெற்றி

Next Post

IND vs WI : டெல்லி டெஸ்டில் ஃபாலோ ஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி.. வலுவான நிலையில் இந்தியா | விளையாட்டு

Next Post
IND vs WI : டெல்லி டெஸ்டில் ஃபாலோ ஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி.. வலுவான நிலையில் இந்தியா | விளையாட்டு

IND vs WI : டெல்லி டெஸ்டில் ஃபாலோ ஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி.. வலுவான நிலையில் இந்தியா | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin