கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விக்கெட்டுகளை அள்ளி குவித்து வருகிறார். இதனால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பௌலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் கேப்டன் கே.எல். ராகுல் ஆகியோர் களத்தில் இறங்கினர்.
டி காக் 10 ரன்களும், ராகுல் 39 ரல்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்தவர்களில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 45 ரன்கள் சேர்த்தார். ஆயுஸ் பதோனி 29 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 161 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் 47 பந்துகளில் 3 சிக்சர் 14 பவுண்டரியுடன் 89 ரன்கள் குவித்தார்.
இந்த போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில் 4 ஓவர்கள் வீசிய மிட்செல் ஸ்டார்க் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன் மற்றும் அர்ஷத் கான் ஆகியோர் ஸ்டார்க்கின் வேகத்தில் வீழ்ந்தனர். இந்த ஐபிஎல் தொடரில் ரூ.24.75 கோடி என்ற மிக அதிகமான விலைக்கு ஸ்டார்க் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். கடந்த சில போட்டிகளில் அவர் எதிரணிக்கு அதிக ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட்டுகளை சொல்லும்படி எடுக்காத நிலையில் அவர் மீது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
தற்போது அவர் விக்கெட்டுகளை அள்ளிக் குவித்து வருவதால் கொல்கத்தா அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 2-ஆவது இடத்தில் உள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)