டெல்லியின் குருகிராமை சேர்ந்த ஆகாஷ் குமார் தனது மகனின் பிளே ஸ்கூல் கட்டணத்தொகையின் பில்லை இணையத்தில் பதிவிட்ட சிறிது நேரத்தில் காட்டுத்தீ போல பரவி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆகாஷ் குமார் அவரது மகனை பிளே ஸ்கூலில் சேர்த்துள்ளார். அதற்கான கட்டணமாக 4,30,000 பெறப்பட்டுள்ளது. கட்டணப் பில்லை போட்டோ எடுத்து அவரது எக்ஸ் பக்கத்தில், “எனது மகன் நன்றாக விளையாடுவான்.” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். அதனோடு அவரது கருத்தையும் பதிவிட்டுள்ளார். “நான் என் வாழ்நாள் முழுவதும் படிப்பதற்கான செலவை விட இது அதிகம்.” எனக் கூறியுள்ளார்.
இதனை நெட்டிசன்கள் வைரலாக்கியதுடன் தங்களது கருத்துகளை கேலியுடன் பகிர்ந்துள்ளனர். ஒரு பயனாளர், “உங்களது மகன் விராட் கோலியை விட சிறந்த விளையாட்டு வீரராக வருவார்.” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொருவரோ “விளையாடும் இடத்தில் உள்ள ஒவ்வொரு மணலும் உண்ணக் கூடியவை போலும்.” எனக் கிண்டலாக கூறியுள்ளார். வேறொருவரோ “கல்லூரியில் கற்றுக்கொள்ளும் அனைத்தையும் பிளே ஸ்கூலிலேயே உங்கள் மகன் கற்றுக்கொள்வான். கவலைப்படாதீர்கள்” என அவரது கருத்தை கூறியுள்ளார்.
My son’s Playschool fee is more than my entire education expense 🙂
I hope vo ache se khelna seekhle yaha! pic.twitter.com/PVgfvwQDuy
— Akash Kumar (@AkashTrader) April 12, 2024
எது எப்படியோ இன்றைய காலகட்டத்தில் கல்வி கட்டணம் மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது என்பதை மறுப்பதற்கு இடமில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
