கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற ரயில், புவக்பிட்டிய – அவிசாவளை இடையிலான பகுதியில் இன்று (8) மாலை தடம்புரண்டது.
இந்த சம்பவத்தால் களனிவௌி ரயில் பாதையில் ரயில்கள் தற்போது கொஸ்கம வரை மட்டுமே இயக்கப்படுகின்றன என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. R