[ad_1]
Last Updated:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன்ஷிப் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் மொத்த வீரர் ஐயருக்கு அணியில் பிசிசிஐ வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது பிசிசிஐ ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன்ஷிப் பொறுப்பை வழங்கியுள்ளது.
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் ஆகியவை செப்டம்பர் 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விளையாட உள்ளன. 3 நாட்கள் கொண்ட போட்டியாக இந்த தொடர் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில் இந்த தொடருக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த அணியில் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் சாய் சுதர்சன், துருவ் ஜுரல், தேவதத் படிக்கல், கலீல் அகமது, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை ஸ்ரேயாஸ் வெளிப்படுத்தினால், அதற்கு அடுத்து வரக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன்ஷிப் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போட்டித் தொடர் முடிந்த பின்னர் இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 30 , அக்டோபர் 3 மற்றும் அக்டோபர் 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்தியா ஏ அணி – ஷ்ரேயாஸ் ஐயர் (சி), அபிமன்யு ஈஸ்வரன், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் படோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் யார் கோட்டியன், பிரசித் கிருஷ்ணா, குர்னூர், சுதர் கிருஷ்ணா, குர்னூர் தாக்கூர்
September 06, 2025 4:36 PM IST