[ad_1]
சிங்கப்பூரில் செப்.1 முதல் செப்.4 வரை நடந்த சோதனை நடவடிக்கையில் சுமார் 123 பயணிகள் பிடிபட்டனர்.
அவர்கள் மின்சிகரெட் பயன்படுத்தியதாக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) கண்டறிந்தது.
மேலும் அவர்களிடம் இருந்து 1,500 மின்சிகரெட் மற்றும் தொடர்புடைய பாகங்களையும் ICA பறிமுதல் செய்துள்ளது.
இந்த விவரங்களை ICA தனது Facebook பதிவில் நேற்று (செப்டம்பர் 5) பகிர்ந்து கொண்டது.
பிடிபட்டவர்களில் 70% நபர்கள் குறுகிய கால வருகையாளர்கள் மற்றும் 30% பேர் குடியிருப்பாளர்கள் என்றும் ICA கூறியுள்ளது. இதில் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களும் அடங்குவர்.
அந்த 123 பேரில் சோதனைச் சாவடிகளில் தங்கள் மின்சிகரெட்களை தானாக முன்வந்து அப்புறப்படுத்தியவர்களும் அடங்குவர்.
4D லாட்டரியில் டாப் பரிசை தூக்கிய “9999” – இதுவே முதன்முறை
“செப்டம்பர் 1 முதல், மின்சிகரெட்க்கு எதிரான கடும் நடவடிக்கை சிங்கப்பூர் அமல்படுத்தியுள்ளது என்று ஏற்கனவே நாம் பதிவிட்டு இருந்தோம்.
இந்நிலையில், மின்சிகரெட் வைத்திருப்பது, பயன்படுத்துவது அல்லது இறக்குமதி செய்து பிடிபட்ட நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ICA அந்த பதிவில் குறிப்பிட்டது.
மீண்டும் அதே குற்றத்தை செய்யும் குறுகிய கால வருகையாளர்கள் சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைய தடை விதிக்கப்படலாம்.
மூன்றாவது முறை அதே குற்றம் செய்து பிடிபடும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களின் அனுமதிகள் ரத்து செய்யப்படலாம்.
அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள், மீண்டும் சிங்கப்பூர் நுழையவும் தடை விதிக்கப்படலாம்.
மின்சிகரெட்: S பாஸ், ஒர்க் பெர்மிட் வெளிநாட்டு ஊழியர்களுக்கு செப்.1 முதல் கடும் நடவடிக்கை
சிங்கப்பூரில் S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: செப்.1 முதல் வரும் மாற்றங்கள் என்ன?
ஒர்க் பெர்மிட் வெளிநாட்டு ஊழியர்களுக்கு செப்.1 முதல் என்னென்ன மாற்றங்கள் / நடவடிக்கைகள்?