• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

GIS: சொத்து மதிப்பீட்டுக்கு உதவும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம்! | Geographic Information System Technology to Help for Evaluate Property!

GenevaTimes by GenevaTimes
September 5, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
GIS: சொத்து மதிப்பீட்டுக்கு உதவும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம்! | Geographic Information System Technology to Help for Evaluate Property!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜிஐஎஸ் எனப்படும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம் சொத்து மதிப்பீட்டுக்கு மிகவும் உதவியாக உள்ளதாக நில மதிப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட சொத்தின் சந்தை மதிப்பை மதிப்பிட்டு, அதன் மதிப்பு குறித்த துல்லியமான அறிக்கையை வழங்கும் தொழில்முறை நிபுணர்கள் மதிப்பீட்டாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசுத் துறைகள் மற்றும் தனிநபர்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்காக சொத்து மதிப்பு, காப்பீடு, வரிவிதிப்பு, விற்பனை, அடமானக் கடன்கள் போன்ற பல்வேறு சேவைகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு, புவியியல் தகவல் முறைமை (Geographic Information System – GIS) என்ற தொழில்நுட்பம் உறுதுணையாக உள்ளதாக மதிப்பீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, பாலாஜி அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குநர் எல்.பாலாஜி கூறுகையில், நிலம் மற்றும் கட்டிட மதிப்பீட்டாளர்களுக்கு ஜிஐஎஸ் தொழில்நுட்பம் பெரிதும் உதவிகரமாக உள்ளது. இதன் மூலம், இடம் சார்ந்த தரவுகளின் அடிப்படையில், புவியியல் வடிவங்களை புரிந்துகொள்ள பகுப்பாய்வு செய்யப்படுகிறது. மேலும் தரவுகளை வரைபடங்கள், 3டி காட்சிப்படுத்துதல்கள் மூலம் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி காட்டுகிறது. இத்தொழில்நுட்பம் மூலம் எடுக்கப் படும் புகைப்படங்களில், வேளாண்மை நிலம், அரசு அலுவலகக் கட்டிடங்கள், வணிகக் கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு தனித்தனி வண்ணங்கள் கொடுத்து பிரித்து காட்டுகிறது.

பாலாஜி

சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு உறுதுணையாக உள்ளது. வெள்ள பாதிப்புகள் மற்றும் பிற பேரிடர்களை மதிப்பிடுவதற்கு உதவுகிறது. நகரங்களின் நிலப் பயன்பாடு, உள்கட்டமைப்பு போன்றவற்றை நிர்வகிக்க முடியும். நில உரிமை, மதிப்பு, மேலாண்மை மற்றும் பயன்பாடு உள்ளிட்ட நிலத் தகவல் மற்றும் நிலப் பதிவுகளின் அனைத்து அம்சங்களையும் நிர்வகிக்க இத்தொழில் நுட்பம் உதவுகிறது.

விரிவான நில நிர்வாக அமைப்பில் உள்ள அனைத்து நிலத் தகவல்களுடனும், அரசாங்கங்கள் நிலத் தகவல் மேலாண்மை, சொத்து மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு பொதுமக்களுடனான தொடர்பு ஆகியவற்றை இதன்மூலம் மேம்படுத்த முடியும், என அவர் தெரிவித்தார்.

விஜயகுமார்

இந்திய மதிப்பீட்டாளர்கள் கழக மதுரை கிளை தலைவர் விஜயகுமார் கூறுகையில், புவியியல் தரவை உருவாக்க, பகுப்பாய்வு செய்ய, நிர்வகிக்க இத்தொழில்நுட்பம் பயன்படுகிறது. இது பொதுவாக செயற்கைக் கோள்கள், வான்வழி படங்கள், தரை ஆய்வுகள் போன்ற பல்வேறு மூலங்களில் இருந்து தரவுகளை சேகரித்து, அவற்றை ஒரே தரவுத்தளத்தில் ஒருங்கிணைக்கிறது.

பின்னர் இதனை பகுப்பாய்வு செய்து, வரைபடங்கள், விளக்கப் படங்கள், பிற காட்சிப் படுத்துதல்களை உருவாக்கலாம். இதன் மூலம் நகர்ப்புற திட்டமிடல், இயற்கை வள மேலாண்மை, அவசரகால பதில் மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முடிவெடுக்கும் செயல் முறைகளைத் தெரிவிக்கப் பயன்படும், எனக் கூறினார்.



Read More

Previous Post

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என்ற நவரோவின் வாதம் தவறானது: இந்தியா | India rejects Peter Navarro’s ‘Brahmin profiteering’ remark as inaccurate

Next Post

5.2 கிலோ எடையில் பிறந்த ‘பிள்ளையார்’ குழந்தை: மருத்துவர்கள் ஆச்சரியம் | Makkal Osai

Next Post
5.2 கிலோ எடையில் பிறந்த ‘பிள்ளையார்’ குழந்தை: மருத்துவர்கள் ஆச்சரியம் | Makkal Osai

5.2 கிலோ எடையில் பிறந்த 'பிள்ளையார்' குழந்தை: மருத்துவர்கள் ஆச்சரியம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin