• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“ஈரான் – இஸ்ரேல் மோதலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” – இந்திய வெளியுறவு அமைச்சகம் | Seriously concerned over hostilities between Israel and Iran India

GenevaTimes by GenevaTimes
April 14, 2024
in உலகம்
Reading Time: 8 mins read
0
“ஈரான் – இஸ்ரேல் மோதலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” – இந்திய வெளியுறவு அமைச்சகம் | Seriously concerned over hostilities between Israel and Iran India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது என்றும் இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது கடந்த 1-ம்தேதி இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ அதிகாரிகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதனிடையே இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. இஸ்ரேல் – ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும். பிராந்தியத்தில் பாதுகாப்பு பேணப்படுவது இன்றியமையாதது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல்- ஈரான் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து ஆலோசனை நடத்த ஐ.நா சபை அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது. இஸ்ரேல், ஈரான் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது போராக வெடித்தால் அப்பகுதி மக்களின் அமைதி சீர்குலையும் என்பதே உலக நாடுகளின் பயமாக இருக்கிறது.



Read More

Previous Post

MI vs CSK | ஹாட்ரிக் சிக்ஸர் விளாசிய தோனி: மும்பைக்கு 207 ரன்கள் இலக்கு | ruturaj shivam dube dhoni csk sets 207 target for mi

Next Post

துப்பாக்கி சூட்டின் எதிரொலி: KLIAவின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மறு ஆய்வு | Makkal Osai

Next Post
துப்பாக்கி சூட்டின் எதிரொலி: KLIAவின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மறு ஆய்வு | Makkal Osai

துப்பாக்கி சூட்டின் எதிரொலி: KLIAவின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மறு ஆய்வு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin