• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சினிமாவில் இருந்து அரசியல் – உதயநிதி பாணியில் இன்பநிதியை கொண்டுவர முயற்சிக்கும் தி.மு.க. | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 4, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சினிமாவில் இருந்து அரசியல் – உதயநிதி பாணியில் இன்பநிதியை கொண்டுவர முயற்சிக்கும் தி.மு.க. | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‍நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது. இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.  இந்நிலையில், உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டுள்ளது.

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தை வெளியிடுவதன் மூலம்விநியோகஸ்தராக அவர் களமிறங்கவுள்ளதை ரெட் ஜெயண்ட் நிறுவனம் உறுதிசெய்தது. இதை தொடர்ந்து இன்பநிதி தொடர்ந்து, பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார். இன்பநிதிதனது அப்பா வழியில் விநியோகஸ்தராக தனது கெரியரை தொடங்கியுள்ளார். உதயநிதியின் திரைப்பயணமும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வழியாக தான் தொடங்கியது.

விஜய், திரிஷா நடித்த ‘குருவி’ திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். கௌதம் மேனனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் விநியோகஸ்தராக உருவெடுத்தார். இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக பல வெற்றி படங்களை அவர் வெளியிட்டார்.திரையில், 2009-ம் ஆண்டு வெளியான ‘ஆதவன்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து 2012-ம் ஆண்டு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்றபடம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார். அப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து ‘மனிதன்’, ‘நிமிர்’, ‘கண்ணே கலைமானே’, ‘சைக்கோ’,”நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். திரைப்படங்களில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபடஆரம்பித்தார். 2019-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, 2021 தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2022 டிசம்பர்மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 2023-ம் ஆண்டு வெளிவந்த ‘மாமன்னன்’ படத்துடன் தன்னுடைய திரையுலகைபயணத்தை முடித்துக் கொண்ட உதயநிதி, அதன் பின்னர் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றார்.

மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து திமுகவில் உதயநிதி தான் முதலமைச்சர்என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அப்பா வழியில் இன்பநிதி விநியோகஸ்தராக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்துவிரைவில் கதாநாயகனாகவும் இன்பநிதி அறிமுகமாவார் என்று கூறப்படுகிறது. ஆகவே, உதயநிதியை போல இன்பநிதியும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்குவருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது. இதன் தொடக்கமாக தான் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 



Read More

Previous Post

Exclusive : ‘இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு வலுவாக உள்ளது..’ – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் | இந்தியா

Next Post

இலங்கையில் பெண்ணொருவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை – ஐபிசி தமிழ்

Next Post
இலங்கையில் பெண்ணொருவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை – ஐபிசி தமிழ்

இலங்கையில் பெண்ணொருவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை - ஐபிசி தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin