எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்லவிற்கு சுற்றுலாவிற்காக சென்ற தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
சுற்றுலாவிற்கு சென்று மீண்டும் தங்காலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.(a)


