[ad_1]
சீனாவின் புகழ் பெற்ற அரண்மனை
அரண்மனை என்றாலே அதன் பிரமாண்ட கட்டிட அமைப்பும், அதன் அழகான வெளி தோற்றங்களும் பலரையும் ஈர்க்கும்.
அதிலும், சீனாவின் பீஜிங் நகரத்தில் உள்ள “ஏகாதிபத்திய அரண்மனை” (Imperial Palace) தோற்றம் உலகில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. மிகவும் புகழ் பெற்ற மிகப்பெரிய இந்த அரண்மனை குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
வரலாற்று மற்றும் கட்டடக்கலையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் இந்த அரண்மனை, பல நூற்றாண்டுகளாக மன்னர்களின் தனிப்பட்ட உலகமாக இருந்துள்ளது.
இது சாதாரண மக்களுக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. இன்று, இந்த அரண்மனை பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டு, பார்வையாளர்கள் அதன் பிரமாண்டமான மண்டபங்களை ஆராய முடியும் என கூறப்படுகிறது.
1406 முதல் 1420 வரை மிங் மன்னர் யோங்லேவின் ஆட்சியில் பீஜிங்கில் நகரம் உருவாக்கப்பட்டது. இந்த நகரமும் தடைசெய்யப்பட்ட நகரமாக இருந்துள்ளது.
இந்த அரண்மனை சீன அரசவையின் வலிமையையும் அதிகாரத்தையும் குறிப்பதாகவும், லட்ச கணக்கான தொழிலாளர்கள் இதன் கட்டுமானத்தில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.