இஸ்ரேலுக்கு உதவி புரிந்தால் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதில் அளிக்கும் வகையில் இச்ரேல் மீது ஈரான் ராணுவம் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேல், அமெரிக்க ராணுவங்களால் இடைமறிக்கப்பட்டன.
தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், இஸ்ரேலை நோக்கி செலுத்தப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்க ராணுவ படைகளால் இடைமறிக்கப்பட்டன. ஈரானுடனான மோதலை அமெரிக்கா விரும்பவில்லை எனினும் இஸ்ரேலுக்கு உறுதுணையாக இருப்போம்.” எனக் கூறியுள்ளார்.
மேலும் தெரிந்துகொள்க:
வெடிக்கும் இஸ்ரேல் – ஈரான் போர்.. என்ன நடந்தது?
ஈரானின் தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரது எக்ச் பக்கத்தில், “ஏவுகணைகளை இடைமறித்து முறியடித்தோம், ஒன்றாக வெல்வோம்.” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிகோ, நெதர்லாந்து, பிரிட்டன், டென்மார்க், பிரான்ஸ் , ஜப்பான், நார்வே உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும் ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஈரான் ராணுவம் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த குறிப்பில், “இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்தால் அமெரிக்காவையும் தாக்க தயங்கமாட்டோம். இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தினால் இதை விட மோசமான தாக்குதலுக்கும் தயங்க மாட்டோம். இஸ்ரேலுக்கு உதவிக்கு வரும் எந்த நாட்டினர் மீதும் பதில் தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம்.” என ஈரானின் ராணுவ செய்தி தொடர்பாளர் தெஹ்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
