கோலாலம்பூர்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) ஏரோட்ரெயின் (aerotrain) சேவை, ஆகஸ்ட் 18 முதல் 31 வரை, திட்டமிடப்பட்டப் பராமரிப்புப் பணிகளுக்குப் பிறகு, மீண்டும் முழு 24 மணி நேர இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) நிர்வாக இயக்குநர் டத்தோ முகமட் இஸானி கானி (Datuk Mohd Izani Ghani) அவர்கள், பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு, இரவு நேரங்களில், இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஒப்பந்ததாரரான, அல்ஸ்டோம் (Alstom) நிறுவனத்தால், இந்த அமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, புதிய மென்பொருட்கள் சோதிக்கப்பட்டன.
பராமரிப்புப் பணிகளின்போது, பயணிகளுக்கு, இடையூறு இல்லாத இணைப்பை உறுதிப்படுத்த, மாற்றுப் பேருந்து சேவைகள் பயன்படுத்தப்பட்டன.
மேலும், ஏரோட்ரெயின் சேவை, விமான நிலையத்தின் செயல்பாடுகளுக்கு, மிகவும் முக்கியமானது என்றும், அதன் நம்பகத்தன்மை, பாதுகாப்பு, பயணிகளின் வசதியை மேம்படுத்த, தொடர்ந்து முதலீடுகள் செய்யப்படும் என்றும், அவர் உறுதியளித்தார்.




