Last Updated:
பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
56th GST Council meeting Announcement: சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) 5% மற்றும் 18% என 2 வரம்புகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 12%, 28% ஜிஎஸ்டி வரிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த,புதிய ஜிஎஸ்டி வரி முறை செப் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரிகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்தார். இதனையடுத்து, ஜிஎஸ்டி விகித சீரமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த முன்மொழிவுகளை, ஜிஎஸ்டி கவுன்சிலால் நிர்மாணிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவிற்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.
Hon’ble Prime Minister Shri @narendramodi announced the Next-Generation GST Reforms in his Independence Day address from the ramparts of Red Fort.
Working on the same principle, the GST Council has approved significant reforms today.These reforms have a multi-sectoral and… pic.twitter.com/NzvvVScKCF
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) September 3, 2025
இந்நிலையில், இன்று புதுடெல்லியில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. புதிய சீர்திருத்தத்தின் கீழ், நான்கு அடுக்குகளுக்கு பதிலாக இனி 5%, 18% என இரண்டு அடுக்கு வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், பால், பனீர், பீஸா, பிரட், தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப்பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சாமானிய மக்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வகுப்பினர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக வரி விகிதங்களின் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
September 03, 2025 11:00 PM IST
ஜிஎஸ்டியில் 12%, 28% வரிகள் நீக்கம்…புகையிலை பொருட்களுக்கு 40% வரி … நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு


