தனிநபர் கடன் வசூல் செய்பவர்களை கையாள்வது என்பது மிகவும் சிரமமான, அதே நேரத்தில் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. எனினும், கடன் பெறுநர்கள் தங்களுடைய உரிமைகள் பற்றி தெரிந்து வைத்துக் கொண்டு, பொறுப்புடன் நடப்பதன் மூலம், இந்த மாதிரியான சூழ்நிலைகளை மிகவும் அமைதியான முறையில் கையாள முடியும். வங்கிகள் மற்றும் ரெக்கவரி ஏஜென்ட்கள் பின்பற்ற வேண்டிய சில கண்டிப்பான விதிமுறைகளை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வகுத்துள்ளது.


