உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில் உள்ள பம்ப் அருகே, ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலை 9 மணியளவில் அடையாளம் தெரியாத ஒரு பெண், கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை உடகூராய்விற்காக அனுப்பி வைத்து, கொலை செய்யப்பட்ட பெண் யார்? கொலையாளி யார்? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடங்கினர்.
அதில் கொலை செய்யப்பட்டவர், உ.பி.யின் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் வசிக்கும் ராணி என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவத்திற்கு சில நாட்கள் முன்புதான் அவர் காணாமல் போனதாக, அவரது குடும்பத்தினரால் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்த நிலையில் ராணியின் செல்போன் எண்ணை ட்ராக் செய்து கொலை செய்யப்படுவதற்கு முன் அவர் யார் ? யாரிடம் செல்போனில் பேசியுள்ளார்? என்பது குறித்த தகவல்களைச் சேகரித்தனர்.
அதில் ராணிக்கு, அடிக்கடி போன் செய்து பேசிய அருண் ராஜ்புத் என்பவரை போலீசார் கண்டுபிடித்தனர். கடந்த ஒரு வருடங்களாக இரவு பகல் என இஷ்டத்திற்கு ராணியிடம் பேசிய அருண் ராஜ்புத்தை பிடித்து, காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் சம்பவங்கள வெளிவந்தன.
குருகிராமில் கன்டெய்னர் டிரைவராக பணியாற்றி வந்த அருணிற்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நண்பரான பழகிய அருண், ராணியின் புகைப்படத்தை பார்த்து ஆசைப்பட்டதுடன், காதலிக்கவும் ஆரம்பித்தார். செல்போன் எண்ணைப் பகிர்ந்து இரவு பகல் என எல்லைமீறினர். இப்படி நேரில் சந்திக்காமலே ஒன்றரை வருடங்களாக ஆன்லைன் காதலில் மூழ்கி கிடக்க, ஒரு நாள் உன்னை நேரில் சந்திக்க வேண்டும் என அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதை ஏற்றுக்கொண்ட காதலி ராணி, ஃபரூக்காபாத்தில் உள்ள ஹோட்டலில் அவரை சந்தித்துள்ளனர். அப்போது அருண் ராஜ்புத் கடும் விரக்தி அடைந்தார். இன்ஸ்டாவில் பார்த்த ராணிக்கும், நேரில் வந்த ராணிக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். தோல் சுருங்கி! முகம் வீங்கி! கிட்டத்தட்ட வயதான தோற்றத்தில் கண் முன்னே அமர்ந்திருந்த ராணியை கண்டு அவர் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளார்.
அந்த சந்திப்புக்கு பின்னர் ஊருக்குள் விசாரிக்க, ராணிக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பதும் கருத்துவேறுபாட்டால் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. எல்லாத்தையும் விட ராணிக்கு வயது 52 என தெரிந்ததும், 26 வயதே ஆன அருண் உடைந்து போயுள்ளார். அது தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் ராணிக்கோ! உண்மை தெரிந்து விட்டதே என்று கொஞ்சம் கூட தயக்கம் இல்லை.
காதலன் அருணே! என்னை எப்போது திருமணம் செய்து கொள்வாய்? எனக்கேட்டு அவருக்கு மன உளைச்சலைக் கொடுத்துள்ளனர். இன்ஸ்டாவில் ஃபில்ட்டர் போட்டு இளம்பெண் போல பேசி தன்னை ஏமாற்றியதை நினைத்து ராணி மீதான காதலை அருண் கைவிட்டுள்ளார். ஆனால் ராணி விடவில்லை. தொடர்ந்து அருணிற்கு கால் செய்து திருமணம் அழுத்தம் கொடுத்தவர், காதலிக்கும்போது வாங்கிய ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை கொடுக்க வேண்டும் எனவும் வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அருண், ராணிக்கு தேதி குறித்துள்ளார். திருமணம் தொடர்பாகப் பேச வேண்டும் என அழைத்து வழக்காமல் அவர்கள் சந்திக்கு இடத்தில் அருண் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டினார். தலைக்கு கட்டும் ஸ்கார்ப்பால் ராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்தவர் உடலை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடித் தலைமறைவானார். இக்கொடூர சம்பவத்தை அருணே போலீசில் வாக்குமூலமாக அளிக்க, கொலை குற்றத்திற்காக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்டாகிராமில் ஃபில்ட்டர் மூலம் 52 வயதை மறைத்து இளம்பெண் போல ஏமாற்றி 26 வயது இளைஞரைக் காதலித்து வந்த பெண், அதே காதலனால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
September 03, 2025 6:56 PM IST
இன்ஸ்டாகிராமில் ஃபில்ட்டரை வைத்து இளைஞரை ஏமாற்றிய பெண்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.. திடுக்கிடும் தகவல்கள்!

