பெங்களூருவில் உணவகத்தில் வெடிகுண்டு வைத்த இருவரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்ய பழுதான செல்போன் காரணமாக இருந்தது தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள், அப்துல் மதீன் தாஹா,மற்றும் முசாவிர் ஹூசேன் சாஷிப் ஆகிய இருவரை கொல்கத்தாவில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தது.
இருவரையும் கொல்கத்தாவில் கைது செய்ய உதவியது பழுதான செல்போன் என தெரியவந்திருக்கிறது. கைதான இருவரில் ஒருவர் தனது செல்போனை பழுதுநீக்க கொல்கத்தாவில் உள்ள கடை ஒன்றில் கொடுத்தார்.
இதையும் படிங்க: இலக்கை அடைந்த ஏவுகணைகள்… ஈரான் தாக்குதலை சமாளிக்குமா இஸ்ரேல்?
பழுது நீக்கும் கடை உரிமையாளரோ, தன்வசம் இருந்த சிம்கார்டை குறிப்பிட்ட செல்போனில் செலுத்தி சோதித்து பார்த்துள்ளார். அப்போது தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் சென்றது.
கடை உரிமையாளரை விசாரித்த தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். குறிப்பிட்ட செல்போன் கொல்கத்தாவில் இருப்பதை உறுதி செய்த என்ஐஏ அதிகாரிகள் அதன் பின்னர் நடத்திய சோதனையின் அடிப்படையிலேயே இருவரையும் கைது செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
