Last Updated:
இந்த ரயில் பாதையில் என்னென்ன சிறப்புகள் உள்ளன என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் முதல் முறையாக மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில் என்னென்ன சிறப்புகள் உள்ளன என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகளுடன் இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமாக மிசோரம் காணப்படுகிறது. கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நிரம்பிய மாநிலமாக அறியப்படும் மிசோரம் தலைநகரான ஐஸ்வாலில் ரயில் போக்குவரத்து இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.
வானுயர்ந்த மலைகளே மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை மற்ற பகுதிகளுடன் ரயில் போக்குவரத்தில் இணைக்க தடையாக இருந்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை ஐஸ்வாலில் ரயில் போக்குவரத்து ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இருப்பினும், கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி அந்த ஆண்டு நவம்பர் மாதம் மிசோரம் தலைநகர் ஐஸ்வாலுக்கு பக்கத்து நகரமான சைராங்குடன் இணைக்கும் ரயில் பாதை திட்டத்திற்கான அடிக்கலை நாட்டினார்.
இதனைத்தொடர்ந்து 11 ஆண்டுகள் கொரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களுக்கு மத்தியில் பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்றன. ஏறத்தாழ 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 51 புள்ளி 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐஸ்வலை இணைக்கும் பைராபி – சைராங் இடையிலான ரயில் பாதை திட்டப் பணிகள் நிறைவு பெற்றன. ரயில் பாதையில் 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள் மற்றும் 48 சுரங்கப் பாதைகள், 5 ரயில் நிலையங்கள், அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், வரும் 13ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். புதிய ரயில் பாதை பயன்பாட்டுக்கு வரும் நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தி – ஐஸ்வால் இடையே உள்ள 18 மணி நேர பயணம் 12 மணி நேரமாக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இரயில்வே வரைப்படத்தில் புதியதாக இணையும் மிசோரம் மாநிலம், 8071 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த புதிய ரயில் பாதை, நாட்டின் ரயில் போக்குவரத்து பாதையில் மற்றொரு மைல்கல்லாக அமைந்து, அம்மாநிலத்தின் பொருளாதாரம், சுற்றுலா, மக்களின் வாழ்வாதாரத்தை வளர்ச்சிக்கு பாதைக்கு அழைத்து செல்ல உள்ளது.
September 02, 2025 3:18 PM IST


