இஸ்ரேலை குறிவைத்து பல நூறு ஏவுகணைகளை வீசி ஈரான் ராணுவ தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரான் வீசிய ஏவுகணைகளால் இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்டான் ஆகிய நாடுகள் அழித்து வரும் சூழலில், பல ஏவுகணைகள் இலக்கை அடைந்துள்ளன. இதனால் இஸ்ரேலில் பதட்டமான சூழல் நிலவியுள்ளது. இதுகுறித்து பேசிய இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு “நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் உயிரிழந்ததுடன் 24ம் இஸ்ரேலியர்களை பிணைய கைதிகளை ஹமாஸ் அமைப்பு காசாவிற்கு அழைத்து சென்றது. பிணைய கைதிகளை மீட்கும் விதமாக இஸ்ரேல் காசா மீது எதிர் தாக்குதலை தொடங்கியது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காசா மக்களும் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டனர். தற்போது 100 பிணைய கைதிகளை இஸ்ரேல் மீதமுள்ளவர்களையும் மீட்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தேவையான உதவிகளை சிரியா, லெபனான் நாடுகளை சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுக்கு ஈரான் வழங்கி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் மீது ஈரான் விரைவில் மிக விரைவில் தாக்குதல் நடத்தும் என நேற்று கூறிய நிலையில் இன்று அதிகாலை இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதலை தொடங்கியுள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் எதிர் தாக்குதலை தொடங்கியுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் தெரிந்துகொள்ள :
இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு தயாராகிறதா ஈரான்… ஜோ பைடன் கூறியதென்ன?!
இஸ்ரேல்-ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டின் ராணுவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 ஈரான் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
